ADDED : மார் 22, 2019 02:17 PM

பிள்ளைகளால் சிரமப்படும் பெற்றோர் முதியோர் இல்லங்களுக்கு மனம் உடைந்து செல்கின்றனர். சிலர் கட்டாயமாக அனுப்பப்படுகின்றனர். இது மிகவும் தவறான போக்கு. பெற்றோருக்கு எந்தளவுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பது குறித்து நபிகள் கூறுவதைக் கேளுங்கள்.
* எவன் ஒருவன் தன் தந்தையின் பக்கம் வெறுப்பான பார்வையைச் செலுத்துவானோ, அவன் பெற்றோருக்கு அடி பணிந்தவனாக மாட்டான்.
* உமது தந்தைக்கு முன்பாக நீர் நடக்காதீர். அவர் உட்காருவதற்கு முன் நீர் உட்காராதீர். அவருடைய பெயரைச் சொல்லி அழைக்காதீர். அவரைப் பற்றி எவரிடமும் குறை சொல்லித் திரியாதீர்.
* வயது வந்த பெற்றோருக்கு பிள்ளைகள் செலவு செய்யவில்லையானால், அவர்கள் சொர்க்கம் நுழைய முடியாது.
* பெற்றோருக்கு உதவி செய்யும் பிள்ளைகளின் வயதை இறைவன் அதிகப்படுத்துவானாக.
* பெற்றோரை மனம் நோகச் செய்வது பெரும் பாவமும், தண்டனைக்குரியதும் ஆகும்.
* பெற்றோரை துன்புறுத்திய ஒருவன் மன்னிப்புக்கேளாமல் இறந்து விடுவானாயின், அவன் தண்டிக்கப்படுவான்.
* பெற்றோர் அநியாயம் செய்தாலும், அவர்களிடம் பிள்ளைகள் அன்பைச் செலுத்துவது கட்டாயக் கடமையாகும்.