நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பேசுவது வெள்ளி என்றால், மவுனம் காப்பது தங்கம்.
* பசித்தவருக்கு உணவு அளிப்பவனை சொர்க்கம் தேடி வரும்.
* ஏழைக்கு தானம் செய்வதை விட, அதிக நன்மை மனைவிக்கு செலவு செய்வதில் உண்டு.
* கடன் கொடுக்கல் வாங்கலில் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.
* பணவசதி இருந்தும் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லதல்ல.
* இரக்கமற்ற கஞ்சன் சொர்க்கம் நுழைய மாட்டான்.
* ஆசைகள், தேவைகளைக் குறைத்தால் சுதந்திரமாக வாழலாம்.
* கொடுத்த வாக்குறுதியை பாதுகாக்காதவன் நல்ல மனிதன் அல்ல.
* உங்களுடைய பாவங்களை இறைவன் மன்னிப்பான். ஆனால் உங்களுடைய கடன் திருப்பித் தராவிட்டால் மன்னிக்க மாட்டான்.
* உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதனதன் அளவு முறையுடன் தான் படைக்கப்பட்டுள்ளது.
* குடும்பத்திற்காக செலவழித்தால் தர்மத்தின் நன்மையை இறைவன் அளிக்கிறான்.
- பொன்மொழிகள்

