
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நற்குணம் கொண்டவரே உங்களில் சிறந்தவராவார்.
* நம் உருவத்தையோ, செல்வத்தையோ இறைவன் பார்ப்பதில்லை. உள்ளத்தையும், செயலையும் பார்க்கின்றான்.
* ஒரு வினாடி நேர நல்ல சிந்தனை, ஓராண்டு கால இறைவணக்கத்தை விட சிறந்தது.
* நல்ல எண்ணத்துடன் இருப்பதுகூட தர்மம் தான்.
* எளிமையாக வாழ்வதே இறைநம்பிக்கையின் அடிப்படை.
* உண்மை பேசுபவன் நன்மையின் பக்கம் செல்கிறான். நன்மை அவனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்கிறது.
* பெற்றோரின் பிரியத்தில் தான் இறைவனின் பிரியமும் இருக்கிறது.
* நல்ல எண்ணத்துடன் செய்யும் சிறிய உதவிக்கு பெரிய பலன் கிடைக்கும்.
- பொன்மொழிகள்

