sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

ஒவ்வொரு பேச்சுக்கும் பதிலுடன் காத்திருங்கள்!

/

ஒவ்வொரு பேச்சுக்கும் பதிலுடன் காத்திருங்கள்!

ஒவ்வொரு பேச்சுக்கும் பதிலுடன் காத்திருங்கள்!

ஒவ்வொரு பேச்சுக்கும் பதிலுடன் காத்திருங்கள்!


ADDED : மே 13, 2014 03:29 PM

Google News

ADDED : மே 13, 2014 03:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யாராக இருந்தாலும், பிறர் மனம் புண்படும்படி அறவே பேசக்கூடாது. நாம் என்னவெல்லாம் பேசுகிறோமோ, அந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் இறைவனிடம் பதில்சொல்லத் தயாராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமக்கு நாக்கு படைக்கப்பட்டிருப்பது சுவையான உணவை சாப்பிடுவதற்காக மட்டுமல்ல. பேச்சில் கவனம் செலுத்தவும் தான்!

இதோ பேச்சுக்கான கட்டளைகள்:

* தேவையிருந்தால் மட்டும் பேசுங்கள்.

* நன்மை தரும் பேச்சை மட்டும் பேசுங்கள்.

* மலர்ந்த முகத்துடன் கண்ணியமாக பேசுங்கள்

* மென்மையான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள்.

* மற்றவர் கேட்க முடியாத அளவுக்கு தாழ்ந்த குரலில் பேசாதீர்கள்

* பிறர் பயப்படும்படி உரக்கவும் பேசாதீர்கள்

* பிறர் மனம் வலிக்கும்படி பேசாதீர்கள்

* நீதி தவறாமல் பேசுங்கள்

* தீய பேச்சால் நாக்கை கறைப்படுத்தாதீர்கள்

* பிறருடைய குறைகள் பற்றி பேசாதீர்கள்

* உங்கள் நாக்கு, கோள் சொல்லக்கூடாது

* பிறரை கேலி செய்யும் வகையில் பேசாதீர்கள்

* பொய்யான வாக்குறுதிகளை வீசாதீர்கள்

* யாருக்கும் பட்டப்பெயர் வைக்காதீர்கள்

இதையெல்லாம் மீறி, தேவையில்லாமல் பேசுவது மதிப்பைக் குறைக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர் ஒருவர் உடனடியாக பதிந்து கொள்கிறார். நம் இறப்புக்குப் பின் ''இவர் இன்ன வார்த்தையைப் பேசினார்,'' என்று இறைவனிடம் அவர் சொல்வார். அது நல்ல வார்த்தையாக இருந்தால், நாம் பலனடைவோம். மோசமானது மட்டுமல்ல, தேவையற்றதும், பலனற்றதுமாக இருந்தால், இறைவனின் கோபத்திற்கு ஆளாவோம். இனியாவது பிறர் மனம் புண்படாதபடி பேசலாமே!






      Dinamalar
      Follow us