
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
* நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
* உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.
* லஞ்சம் வாங்குபவர் மீதும், லஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
* கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
* உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் மட்டுமே இறைவன் பார்க்கின்றான்.
நபிகள் நாயகம்