
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமக்கு எவ்வளவோ நன்மைகள் நடக்கின்றன. மூன்று வேளையும் சாப்பிடுகிறோம். உடுத்துகிறோம். இரவில் நிம்மதியாக துாங்குகிறோம். இதற்கெல்லாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். ஆனால் பலருக்கும் நன்றியுணர்வு இருப்பதில்லை.
இன்னும் சிலரோ, 'நான் சுயமாக சம்பாதிக்கிறேன். யாருக்கு நன்றி கூற வேண்டும்' என ஆணவத்துடன் இருக்கிறார்கள். உண்மையில் உழைக்கும் சக்தி, புத்திசாலித்தனத்தைக் கொடுத்தது அவனே. அதனால் அவனுக்கு நன்றி சொல்வது அவசியம். எப்படி நன்றியுடன் வாழ்கிறோமோ அதைப் பொறுத்தே சுவனம் அமையும்.