
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இப்னு அப்பாஸ் (ரலி) சிறுவனாக இருந்த காலத்தில் நபிகள் நாயகத்தை சந்தித்தார். அவரிடம், ''சிறுவனே... உனக்கு சில வார்த்தைகளை சொல்கிறேன். அதை மறந்து விடாதே. எப்போதும் இறைவனை வணங்கு. உன்னை காவல் காப்பான். எதையும் அவனிடமே கேள்.
உனக்கு ஒருவர் நன்மை செய்ய நினைத்தாலும் இறைவன் விதித்ததை தவிர எந்த நன்மையும் செய்ய முடியாது. அதே போலத் தான் தீமையும்... எழுதுகோல்கள் எடுக்கப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன. இனி எழுதுவதற்கும், அழிப்பதற்கும் ஏதுமில்லை' என்றார்.