
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுக்கும் காரணம் இறைவனே. அவன் ஒருவனைத் தவிர வேறு யாரும் எதையும் அறிய மாட்டார்கள். மண்ணிலும், மலையிலும், கடலுக்கு அடியிலும் உள்ளதை அவன் அறிவான். சிறிய இலை ஒன்று மரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் அவனுக்கு தெரியாமல் போகாது. பூமியில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் அவனுடைய பதிவேட்டில் இடம் பெறும்.

