
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகில் யாருடைய ஆதரவும் இன்றி வாழ்பவர்கள் அனாதைகள். இவர்களது வாழ்க்கையோ மிகவும் பரிதாபத்திற்கு உரியது. இவர்களுடைய மனம் அன்புக்காக ஏங்கும் தன்மை உடையது. இப்படிப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். சிலர் இதை தொண்டாக எடுத்து செய்கிறார்கள். அனாதைகள் இல்லம், முதியோர் காப்பகம் என பலவழிகளில் செயலாற்றுகிறார்கள்.
எங்கு அனாதை குழந்தைகள் நல்ல விதமாக நடத்தப்படுகிறார்களோ அதுவே சிறந்த வீடாகும். எங்கு அனாதையை மோசமாக நடத்துகிறார்களோ அது கெட்ட வீடாகும். அனாதைகளை அன்புடன் நடத்துங்கள். அவர்களை குடும்பத்தில் ஒருவராக கருதுங்கள். அவர்களுக்கு வயிறார உணவு கொடுங்கள்.