sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்

/

மீனம்

/

மீனம்

ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் : மீனம்
01 ஜன 2023

முந்தய ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்

rasi

மீனம்: பூரட்டாதி 4
எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் உங்களுக்கு இந்த ஆண்டில் மனகுழப்பம் நீங்கும்.  தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கப்பூர்வமான யோசனைகள் மனதில் தோன்றும். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் செல்வாக்கு, அந்தஸ்து அதிகரிக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன்நலன் கருதாமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியாமல் காரியத்தடை அல்லது தாமதம் உண்டாகலாம். உடல்நிலை அதிருப்தியளிக்கும். உடல்நலன் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் திடீர் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவுகளைத் தவிர்க்க முடியாது. எனினும் பயணத்தால் நன்மைகள் உண்டாகும். வருமானம் சீராக இருக்கும். புதிதாக வானம் வாங்கும் யோகம் உண்டாகும். பெரியோர்களின் உதவி சரியான சமயத்தில் கிடைக்கும். மனதில் தைரியத்திற்கு குறைவிருக்காது.  எந்த செயலையும் தயக்கமோ, பயமோ இன்றி செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் சுகமும், மனநிம்மதியும் நிறைந்திருக்கும். குடும்பத்தின் தேவைக்கும் அதிகப்படியான வருமானம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி குடியிருக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். கடந்த காலத்தில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக இருவரும் பாடுபட வேண்டியிருக்கும். குழந்தைகள் திறமையை கண்டு பாராட்டுவீர்கள். உறவினர் வருகை அவ்வப்போது இருக்கும். மற்றவர்களிடம் பேசும் போதும் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.
தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். திட்டமிட்ட செயல்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.
பணியாளர்கள் மேலதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். பணியிடத்தில் செயல் திறமை அதிகரிக்கும். வாக்கு சாதுர்யத்தால் லாபம் காண்பீர்கள்.  பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். சிலர் புதிய பதவி, கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

பெண்கள் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.
கலைத்துறையினருக்கு செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும். வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை. கிடைக்கும் வாய்ப்புகளுக்காக அயராது உழைத்தால் வெற்றி நிச்சயம்.
அரசியலில் உள்ளவர்களுக்கு தேவையான பணஉதவி கிடைக்கலாம். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். மேலிடத்தில் வரும் உத்தரவுகளை தாமதிக்காமல் செய்து முடிப்பது உங்களுக்கு நன்மை தரும்.
மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்பிகைக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.  
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3, 5, 7

சொல்ல வேண்டிய மந்திரம்: அபிராமி அந்தாதியை பக்தியுடன் பாடுங்கள். ராம நாமத்தை 108 முறை ஜபியுங்கள். 

உத்திரட்டாதி
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடைய நீங்கள், இந்த ஆண்டு பல நற்பலன்களைப் பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் இரண்டு மடங்காக கூடும். எதிர்பார்த்த உதவிகள் சரியான சமயத்தில் கிடைக்கும். மனதில் துணிச்சல் உண்டாகும். அதனால் எதை பற்றியும் யோசிக்காமல் விரும்பிய செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம், பணிமாற்றம் உண்டாகலாம். தன்னைத் தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரை உயர்த்துவதற்கும் பாடுபடுவீர்கள். மனோதைரியம் மேலோங்கும். எல்லா வகையிலும் சுகமான வாழ்வு அமையும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். நட்பு வட்டாரம் திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது உடல்நிலை அதிருப்தியளிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். துாக்கம் குறையும். எதிர்பாலினத்தாரின் அறிமுகமும்,  நட்பும் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அந்தஸ்து மிக்க நபர்களின் மூலம் உதவி கிடைக்கும்.
குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவதால் செலவு அதிகரிக்கும். சகோதரர்களின் ஆதரவு தேவையான சமயத்தில் கிடைக்கும். உறவினர்கள் அவ்வப்போது வருகை தருவர். அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை உருவாவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிடம் அனுசரணையாக நடப்பது  நன்மை தரும். குடும்பத்தினருடன் சிறுபிரச்னை ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. கடந்த காலத்தில் தொழிலில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் மூலம் சுமாரான ஆதாயம் கிடைக்கும். சில நேரங்களில் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம், தடை குறுக்கிடலாம்.
பணியாளர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் கிடைக்கும்.
கடன், பணிமாற்றம் பெறுவதில் சாதகமான பலன் கிடைக்கும்.
பெண்கள் துணிச்சலுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி காண்பர். பணவரவு திருப்தியளிக்கும்.  கணவர், குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வருமானம் மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைகள் ஒவ்வொன்றாக மறையும். நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் வாழ்க்கைத்தரம் உயரும்.
அரசியல்வாதிகளுக்கு எந்த ஒரு புதிய முயற்சியும் சாதகமாக முடியும். விருப்பமான தலைவர்களுடன் சந்திப்பு ஏற்படும். எதிர்பார்த்த நிதிஉதவி கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.
மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை நீங்கும். திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவர். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் தரும். விளையாட்டு, சாகசப் பயிற்சிகளில் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடுங்கள். முடிந்தால் ஒருமுறை திருநள்ளாறு செல்லவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 2
சொல்ல வேண்டிய மந்திரம்: சனி போற்றி, சனி அஷ்டகத்தை தினமும் படியுங்கள். 

ரேவதி
நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த ஆண்டில் வீண் குழப்பங்கள்  நீங்கும். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்னையில் சிக்கிக் கொள்ளலாம். கவனமாக இருப்பது நல்லது. காரணமில்லாமல் திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் ஆடம்பரச் செலவுகள் உண்டாகும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். உதவி புரியும் மனப்பான்மை அதிகரிக்கும்.  விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மகிழ்ச்சியடைவீர்கள். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் தடைகளை சந்திப்பீர்கள். வீண் வாக்குவாதங்களின் மூலம் பிறரிடத்தில் பகை, வெறுப்பு போன்றவை உண்டாகலாம். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகன வகையில் அடிக்கடி மராமத்துச் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். பூர்வீகச் சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம், சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பின் இணக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். அவர்ளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வந்து சேரும்.
வாகனப் பயணங்களின் போது கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாளாக இருந்த பிரச்னைகள் விலகும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறி நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். பணி தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்
பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண்செலவும் ஏற்படலாம். வீண் கோபத்தை குறைப்பது நல்லது. நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
கலைத்துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.
அரசியல்வாதிகள் இக்கட்டான சூழ்நிலையை உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பர். எதிர்ப்புகள் மறையும். பணவரவு மனமகிழ்ச்சியை தரும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும்.
மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கல்வி தொடர்பான பயணங்கள், நண்பர்களுடன் சுற்றுலா சென்று திரும்புவர்.  சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரிகாரம் : தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6
சொல்ல வேண்டிய மந்திரம்: பைரவர் கவசத்தை தினமும் படிப்பது அவசியம்.

Advertisement

Advertisement Tariff

மேலும் ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us