குருபெயர்ச்சி பலன்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள் : மீனம்
25 மே 2026 to 07 ஜூன் 2027
முந்தைய குருபெயர்ச்சி பலன்கள்

மீனம்மீனம்:
பூரட்டாதி 4: வழக்கில் வெற்றி
ஞானக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும், 1,2,3ம் பாதங்களான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4 ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவானே ராசிநாதனாகவும் உள்ளார்.
பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல், ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும், அக். 20 முதல் சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரித்து குரு பலன்களை வழங்கிட உள்ளதால், மே 26 முதல், இதுவரை அடைந்துவந்த நன்மைகளில் மாற்றம் ஏற்படும். சுபிட்சம் மறையும். சோதனைகள் அதிகரிக்கும். உடலில் பாதிப்பு ஏற்படும். பண வரவில் தடை உண்டாகும். நண்பர்களும் எதிரியாக மாறும் நிலை ஏற்படும். தொழிலில் முதலீடு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். கடன்தொல்லை வேதனைதரும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு வரும் என்பது ஆறாமிட குரு வழங்கும் பொதுப்பலனாகும். அக். 20 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இந்த நிலையாவும் மாறும். இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். சொத்து சுகம் கூடும். வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். தொழில் வளர்ச்சி அடையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
பூரட்டாதி 4 ம் பாதத்தினருக்கு,மே 26 முதல், பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான 5 ம் வீட்டில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, நினைத்ததை சாதிக்க வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பட்டம், பதவி, பொறுப்பு என்ற கனவை நனவாக்குவார். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றத்தை வழங்குவார். குடும்பத்தில் சுபிட்சமான நிலையினை உண்டாக்குவார். புனித தலங்களுக்கு செல்லும் பாக்கியத்தை வழங்குவார். சொந்த வீடு, குழந்தை பாக்யத்திற்காக ஏங்கியோரின் ஏக்கத்தை தீர்ப்பார். அக். 20. முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குரு, முன்பிருந்த நிலையை மாற்றுவார். எந்த ஒன்றிலும் இழுபறியான நிலை ஏற்படும். உடல்நிலையிலும் ஏதாகிலும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு உங்கள் செயல்பாட்டை தடுக்கும். எதிர்ப்பு, போட்டி, பகை, வம்பு, வழக்கு என உங்கள் நிம்மதியைக் கெடுக்கும். பணவரவிலும் தடை ஏற்படும், வியாபாரம் தொழிலிலும் நெருக்கடி உண்டாகும். உத்தியோகத்திலும் சங்கடங்கள் உருவாகும். குடும்பத்தில் நிம்மதி இல்லா நிலை உருவாகும்.
இவை எல்லாம் குரு வழங்கும் பலன்களேயாகும். உங்கள் நட்சத்திராதிபதியே குரு என்பதால், உங்களுக்கு அவர் வழிகாட்டியாக இருந்து வழிநடத்துவாரே ஒழிய கடுமையாக சோதிக்க மாட்டார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸம்பத், மற்றும் ஷேம தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.
சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்
குருவின் சஞ்சார நிலை பாதகமாக இருக்கும் காலத்திலும் அவருடைய பார்வைகள் படும் இடங்கள் சுபிட்சமடையும்.
பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல், 10,12,2 ம் இடங்களை குரு பார்ப்பதால், வியாபாரம் வளர்ச்சி அடையும். தொழில் லாபம்தரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர்வு ஏற்படும். வீண் செலவுகளும் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் நிம்மதி உருவாகும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். பாத சனியின் பாதிப்பு நீங்கும்.
அக். 20 முதல், உங்கள் ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால், எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் மற்றும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். மற்றவர்கள் மதிக்கும் வகையில் உங்கள் நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும். பட்டம் பதவி தேடிவரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவுகள் நனவாகும்.
பூரட்டாதி 4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் உங்கள் ராசியையும், பாக்யம் மற்றும் லாப ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால், ஜென்ம சனியின் பாதிப்பு
விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கட விலகும். எதிர்பார்த்த புகழும் பெருமையும் கிடைக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். எதிர்பார்ப்பு இல்லாமல் செய்த வேலைகளிலும் இப்போது ஆதாயம் உண்டாகும். அரசாங்க உதவியும் ஆதரவும் கிடைக்கும். விலகி இருந்த நண்பர்கள் உறவினர்கள் உங்களைத்தேடி வருவர். புதிய சொத்து வாங்குவீர்கள். வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற எண்ணம் நிறைவேறும்.
அக். 20 முதல், 10,12, 2ம் இடங்களைக் குரு பார்ப்பதால், செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட சிக்கல், வழக்கு என்பதிலிருந்து விடுதலைக் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு பட்டம் பதவி என யோகம் உண்டாகும். இடம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல் என வாழ்வு மேம்படும். தொழிலைப் புதுப்பிக்கும் பணி நடந்தேறும். புதிய வாகனம், வசதி வாய்ப்பு கூடும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அலைச்சல் குறையும். வருமானம் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.
அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்
ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும்.
பொதுப்பலன்
பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் குருப்பார்வைகளும், அக். 20 முதல் சப்தம குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வைகளும், நவ. 13 முதல் சத்ரு ஜெய ஸ்தான கேதுவும், 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தான குருவும் அவருடைய பார்வைகளும், அக். 20 முதல் குருவின் பார்வைகளும், நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தான கேதுவும். நவ.13 முதல் லாப ஸ்தான ராகுவும் அரண்போல் இருந்து பாதுகாப்பர்.
நன்மைகளை வழங்குவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். சுபிட்சத்தை ஏற்படுத்துவர். பொன் பொருள் புகழுக்கு வழிகாட்டுவர். வழக்கில் வெற்றியை உண்டாக்குவர்.
தொழில்
தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். முடங்கிய தொழில் வளர்ச்சி அடையும். தொழிலாளர்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஜூவல்லரி, ஆடை வர்த்தகம், சிறு குறு நிறுவனங்கள், பெரு வணிகம், நிதி நிறுவனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஏ.ஐ., ஆன்லைன் வர்த்தகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், வேளாண் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை லாபம் தரும்.
பணியாளர்கள்
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். நெருக்கடி நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும்.
பெண்கள்
குரு பகவானின் பார்வைகளும் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதுடன், சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும் வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும், பொன் பொருளும் சேரும்.
கல்வி
ஞானக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்ட உங்களுக்கு, படிப்பின் மீது அக்கறை இருக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில், விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
ஆயுள்காரகன் சனி பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்றாலும், மங்களக்காரகன் குருவின் பார்வைகளும் சஞ்சாரமும், சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரங்களும் ஆபத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். மருத்துவச் செலவு குறையும். தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை எடுத்து வந்தவர்களும் இக்காலத்தில் ஆரோக்கியமாக நடை போடுவீர்கள்.
குடும்பம்
குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள், பிரச்னைகள் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை ஏற்படும்.
பரிகாரம்
ஸ்ரீ வாஞ்சிநாதரை வழிபட சங்கடங்கள் விலகும்.
உத்திரட்டாதி: நீங்கதான் நம்பர் 1
கர்மக்காரனான சனி பகவானை நட்சத்திர அதிபதியாகவும், தன புத்திரக்காரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியானவர்கள். நீங்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால் அதை எவராலும் மாற்ற முடியாது. சாதாரண இடத்தில் பிறந்திருந்தாலும் உங்கள் வாழ்க்கை வளர்ச்சியை நோக்கியதாகவே இருக்கும் என்றாலும், குரு சனி சேர்க்கையின் காரணமாக வெண்ணை திரண்டுவரும் வேளையில் தாழி உடைந்ததுபோல் எல்லாம் கைக்கு வரும் நேரத்தில் அதில் ஒரு தடை வந்துவிடும். மற்றவர்களுக்கு வழிகாட்டிடக்கூடிய உங்களுக்கு, சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரித்து மன உளைச்சலையும், நிம்மதியற்ற நிலையினையும் வழங்கிவந்த குரு, மே 26 முதல், உங்கள் பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானமான 5 ம் வீட்டில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார்.
இதன் காரணமாக, மே 26 முதல் 5 ம் இட குருவால் உங்கள் சங்கடங்கள் தீரும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் போகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். உங்களைவிட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவர். சிலருக்கு காதல் தோன்றும். திருமண வயதினருக்கு திருமணம் முடியும். செய்துவரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாலினரின் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களின் ஏக்கம் தீரும். ஆரோக்யம் சீராகும். புதிய இடம், வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். அக். 20. முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவால், முன்புபோல் யோகப்பலன்களை வழங்க முடியாமல் போகும். ராசிநாதனும் சுப கிரகமுமான குரு மறைவு பெறுவதால் சுபிட்சங்கள் மறையும், நன்மை விலகும், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பண வரவில் தடை உண்டாகும். நண்பர்களும் எதிரிகளாக மாறுவர். தொழிலில் முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும். எதிர்ப்பு, போட்டி, பகை, வம்பு, வழக்கு என சங்கடங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்திலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும்.
இவை எல்லாம் குரு வழங்கும் பலன்களேயாகும்.
உங்கள் நட்சத்திராதிபதி சனி குருவிற்கு நட்பானவர் என்பதுடன், ராசிநாதனே குரு என்பதால், உங்களுக்கு சங்கடமான காலத்திலும் அவர் நன்மைகளையே வழங்குவார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி அதிநட்பு மற்றும் ஸம்பத் தாரைகள் என்பதால் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் நிலை உயரும். நன்மைகள் அதிகரிக்கும்.
சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்
மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியையும், பாக்யம் மற்றும் லாப ஸ்தானங்களையும் பார்ப்பதால், ஜென்ம சனியால் சந்தித்துவரும் பாதகப்பலன்கள் விலகும். ஆரோக்கியமாகவும் செல்வாக்குடனும் நடைபோடுவீர்கள். உங்களுக்கேற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும். பட்டம், பதவி, அந்தஸ்து என்ற கனவு நனவாகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பொன் பொருள் சேரும். புதிய இடம், வீடு என்ற எண்ணம் நிறைவேறும். விலகி இருந்த நண்பர்கள் உறவினர்கள் உங்களைத்தேடி வருவர். சிலருக்கு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். லாபம் கூடும். பொருளாதார நிலை உயரும்.
அக். 20 முதல், 10,12, 2ம் இடங்களைப் பார்க்கும் குருவால், வேலைக்காகவும், புதிய தொழில் தொடங்கவும் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.
செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட சிக்கல், வழக்கு முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு தேடிவரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு பட்டம் பதவி என யோகம் உண்டாகும். இடம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல் என வாழ்க்கை மேம்படும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அலைச்சல் குறையும். வருமானம் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

மே 26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தான குருவும், அக். 20 முதல் குருவின் பார்வைகளும், நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தான கேதுவும். நவ.13 முதல் லாப ஸ்தான ராகுவும் உங்கள் வாழ்க்கையை வளமாக்குவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். செல்வம் செல்வாக்கோடு வாழ வைப்பர். பட்டம் பதவி என்ற கனவை நனவாக்குவர். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பத்தில் உயர்வை ஏற்படுத்துவர். நோய் நொடி எதிர்ப்பு வம்பு வழக்கிலிருந்து விடுவிப்பர்.
தொழில்
தொழில்காரகன் சனிபகவான் ராசிக்குள் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பதுடன், ராசிநாதன் குரு, சனி பகவானைப் பார்ப்பதுடன் அக். 20 முதல் குருவும் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால், செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். நிதி நிறுவனம், ஜுவல்லரி, பங்கு வர்த்தகம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ட்ராவல்ஸ், ஹார்ட்வேர், மென்பொருள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், பதிப்பகம், அச்சகம், கல்வி சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்
உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலையில் ஏற்பட்ட வழக்கு, நெருக்கடி முடிவிற்கு வரும். தடைபட்டிருந்த பதவி உயர்வும் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலைப் பார்க்கும் இடத்தில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு கடல் கடந்து செல்வீர். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
பெண்கள்
ராசிக்குள் சனி பகவான் சஞ்சரித்தாலும், குருப்பார்வை ராசிக்கு கிடைப்பதுடன், குருப் பார்வைகளும், ராகு கேது சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால், நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். படிப்பு, வேலை, திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். மாங்கல்யம் பலம் பெறும். கருத்து வேறுபாட்டாலும் வேலையின் காரணமாகவும் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். குழந்தைகளின் நலனில் அக்கறைகூடும். புதிய வீடு வாகனம் என வாங்குவீர்கள். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும்.
கல்வி
படிப்பும் உத்தியோகமும்தான் வாழ்க்கை என்பதை உணர்ந்திருக்கும் உங்களுக்கு, உயர்கல்வி முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
ஆயுள்காரகன் சனி பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தினாலும், குரு சஞ்சாரமும் பார்வைகளும், ஆறாமிட கேதுவும் படுத்த படுக்கையாக இருப்பவரையும் எழுந்து நடமாட வைப்பார்கள். விபத்து, நோய் என்று மருத்துவ மனைகளுக்கு சென்று வந்தவர்கள் நலமடைவர். ஆரோக்கியம் சீராகும் மருத்துவச்செலவுகள் குறையும்.
குடும்பம்
தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். உறவினர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்கள் நிலை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சேமிப்பு உயரும். வீட்டிற்குள் புதிய உறவு வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும்.
பரிகாரம்
மகாலிங்கேஸ்வரரை வழிபட தடைகள் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.
ரேவதி: நல்லதே நடக்கும்
வித்யாகாரனான புதன் பகவானை நட்சத்திர அதிபதியாகவும், ஞானக் காரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக் கூடியவர்கள். செல்வாக்கு அந்தஸ்தோடு வாழக்கூடியவர்கள். எந்த ஒன்றையும் சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு,
மே 26 முதல், உங்கள் ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான 5 ம் வீட்டில் உச்சமாக சஞ்சரிக்கப் போகிறார், அங்கிருந்து அக். 20 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார்.
மே 26 முதல் 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும். சுப காரியங்கள் நடந்தேறும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வருமானம் வரும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். உயர்கல்வி பட்டம் பதவி என பெருமைகள் சேரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் விலகி நன்மைகள் உண்டாகும். அக். 20. முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவால், உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். எதிர்ப்பு அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும். பணவரவில் தடை, கடன் தொல்லை, உத்தியோகத்தில் நெருக்கடி, தொழிலில் முன்னேற்றம் இல்லாத நிலை, குடும்பத்தில் பிரச்னை, தம்பதிக்குள் கருத்து வேறுபாடு, உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பிரச்னை என்று பலன்கள் மாறும். இவை எல்லாம் குரு வழங்கும் பலன்களேயாகும். உங்கள் ராசிநாதனே குரு என்பதால், நீங்கள் தடுமாறும் போதெல்லாம் தாங்கிப் பிடிப்பார். நெருக்கடிக்கு ஆளாகும் போதெல்லாம் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி நட்பு, அதிநட்பு மற்றும் ஸம்பத் தாரைகள் என்பதால் புனர்பூசம், பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும்.
சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்
குரு சஞ்சரிக்கும் இடங்கள் எதிர்மறையாக இருந்தாலும் அவர் பார்க்கும் மூன்று இடங்களும் சுபத்துவம் அடையும் என்பது ஜோதிடவிதி.
மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு அங்கிருந்து உங்கள் ராசியையும், பாக்யம் மற்றும் லாப ஸ்தானங்களையும் பார்ப்பதால், உங்கள் வாழ்க்கை வளமாகும். செல்வாக்குடன் வாழ்ந்திடும் நிலை உருவாகும். உங்களை அலட்சியமாக பார்த்தவர்களும் ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலை ஏற்படும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். பட்டம் பதவி என்பதெல்லாம் தேடி வரும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி பகவானின் பாதிப்புகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். வேலை, திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். பண நெருக்கடி நீங்கும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.
அக். 20 முதல் உங்கள் ராசிக்கு 10,12, 2ம் இடங்களைப் பார்க்கும் குருவால், செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த பதிவு உயர்வு கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வீண் செலவுகள் குறையும். கடன் தொல்லை விலகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கும் குருவும், அக். 20 முதல் குருவின் பார்வைகளும், நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தான கேதுவும். நவ.13 முதல் லாப ஸ்தான ராகுவும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். நோய் நொடி வம்பு வழக்கு என்றிருந்த நிலைகளை இல்லாமல் செய்வர். வீடு வாகனம் என்ற கனவுகளை நனவாக்குவர். ஆரோக்கியமாகவும் செல்வாக்குடனும் உங்களை நடைபோட வைப்பர்.
தொழில்
செய்து வரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வர்த்தகம் செழிக்கும். வருவாய் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பங்கு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, நிதி நிறுவனம், ஜூவல்லரி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், காண்ட்ராக்ட், பதிப்பகம், அச்சகம், செய்தித்தாள், தனியார் பள்ளிகள், ஆன்லைன் வர்த்தகம், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், ஆன்மீகப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, தொலைக்காட்சி, யூட்யூப், மின்சாதன விற்பனை லாபம் தரும்.
பணியாளர்கள்
ஐ.டி. துறையில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். சிலருக்கு புதிய பொறுப்பும் சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
பெண்கள்
பூர்வ புண்ணிய ஸ்தான குரு, ஆறாமிட கேது, நவ. 13 முதல் லாப ஸ்தான ராகு என்று உங்கள் வாழ்க்கையை வளமாக்குவர்.
போராட்டங்களையே சந்தித்து வந்தவர்களுக்கு அவற்றில் இருந்து விடுதலைக் கிடைக்கும். நினைத்தது நடந்தேறும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை என்ற அவரவர் கனவு நனவாகும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். பொன் பொருள் சேரும். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.
கல்வி
வித்யாகாரகன், ஞானக் காரகன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, படிப்பில் அக்கறை இருக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். எதிர்பார்த்த பாடப்பிரிவில் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். சிலர் வெளிமாநிலம் வெளிநாடு என்றும் மேற்கல்விக்காக செல்வீர்கள்.
உடல்நிலை
ஆறாமிட கேதுவும், குரு சஞ்சாரமும், பார்வைகளும் உங்கள் உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்களை நீக்கும். பார்க்காத டாக்டர் இல்லை போகாத ஆஸ்பிட்டல் இல்லை என விரக்தி அடைந்தவர்களின் நிலை இப்போது மாறும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு குணமாகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும்.
குடும்பம்
பூர்வ புண்ணிய ஸ்தான குரு, ஆறாமிட கேது, நவ. 13 முதல் லாப ஸ்தான ராகு என கிரகங்கள் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். பணப்புழக்கம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை கூடும். நோய் நொடி வம்பு வழக்கு என்று வாழ்ந்த நிலைமாறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.
பரிகாரம்
ஏழு மலைவாழ் வெங்கடாஜலபதியை வழிபட நன்மைகள் நடக்கும். வேண்டுதல் நிறைவேறும்.