sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/குருபெயர்ச்சி பலன்கள்/மேஷம்

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

குருப்பெயர்ச்சி பலன்கள் : மேஷம்
25 மே 2026 to 07 மே 2027

முந்தைய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

மேஷம்மேஷம்

அசுவினி: நல்லகாலம் வந்தாச்சு

இரத்தக் காரகனான செவ்வாய், ஞான மோட்சக்காரகனான கேது அம்சத்தில் பிறந்து பலருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, மே 26 முதல் உங்கள் ராசிக்கு 4 ம் இடமான கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கிறார் குரு பகவான். ஜூலை 7 ல் கடகத்தில் அஸ்தமனம் அடைந்து ஆக. 9 ல் உதயம் ஆகிறார். அக். 20  ல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர், டிச. 22 ல் சிம்மத்தில் வக்ரமாகி வக்ர கதியிலேயே 2027. பிப். 13 ல் கடகத்திற்கு வந்து, ஏப். 20 ல் வக்ர நிவர்த்தி அடைபவர் மே 13 ல் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

உங்கள் ராசிக்கு 4 ம் வீட்டில் சஞ்சரிக்கப் போகும் குரு உங்களுக்கு யோகமான பலன்களை வழங்குவாரா என்றுதானே கேட்கிறீர்கள்? பொதுவாக 4 ம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் இடமாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதற்காகவே தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போம்படி ஆனதும் என்று குரு சஞ்சார நிலைகள் குறித்த பாடலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்றாலும், உங்கள் ராசி நாதனான செவ்வாய்க்கு குரு நட்பானவர் என்பதால் உங்களுக்கு குரு நன்மைகளையே  வழங்குவார் என்பதுடன், அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்களை அதிகரிப்பார்.

சஞ்சாரம், பார்வை பலன்

மே 26 அன்று கடக ராசியில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு அஸ்டமம் மற்றும்  ஜீவனம், விரய ஸ்தானங்களைப் பார்ப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள், எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். செய்துவரும் வியாபாரம் நடத்திவரும் தொழில் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வேலைக்கிடைக்கும். விரயச்செலவுகள் கட்டுப்படும். மனக்குழப்பம் விலகும். விரய சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் ராசியையும், பாக்யம் மற்றும் லாப ஸ்தானத்தையும் பார்க்கும் குருவால் உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து, புகழ் யாவும் உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். உயர்கல்வி, திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, பட்டம் பதவி என்ற கனவுகள் நனவாகும்.

அஸ்தமனம், வக்ர காலங்கள்

கடக ராசியில் சஞ்சரிக்கும் குரு, ஜூலை 10 முதல் ஆக. 9 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிக்கிறார். குரு பகவான் வக்ரமடையும் போது அவர் முன்பிருந்த ராசியின் பலன்களையே ஜாதகருக்கு வழங்குவார் என்பதால், சிம்மத்தில் வக்ரமடையும் காலத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் பலன்களையும், கடக ராசியில் சஞ்சரிக்கும்போது மிதுன ராசியில் சஞ்சரிக்கும் பலன்களையும் தன் பார்வைகள் வழியே வழங்கி உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்.

பொதுப்பலன்

குருப்பார்வைகளும், நவ. 13 வரை லாப ராகுவும், 122 நாட்கள் சூரியனும், 3,6,11ம் இடங்களில் செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்களிலும் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.

தொழில்

ஜீவன ஸ்தானத்திற்கும், தொழில் காரகனான சனிக்கும் குருப்பார்வை உண்டாவதால் நஷ்டத்தில் இயங்கிய தொழில்கள் லாபமடையும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழில் போட்டியாளர்கள் பலமிழப்பர். வாடகை லீஸ் இடங்களில் தொழில் செய்பவர்கள் அந்த இடத்தை வாங்கும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். இயந்திரம், எலெக்ட்ரானிக்ஸ், எக்ஸ்போர்ட், பங்கு வர்த்தகம், திரைத்துறை, கெமிக்கல், காண்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், விவசாயம் சார்ந்த தொழில்களில் ஆதாயம் கூடுதலாகும்.

பணியாளர்கள்

வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்குவதுடன் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வரும் சிலருக்கு நிரந்தரக் குடியுரிமையும், அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும்.

பெண்கள்

குருப்பார்வைகளால் நீண்டநாள் கனவு நனவாகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவர் லட்சியம் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். குடும்பத்தில் மதிப்பு உயரும்.

கல்வி

படிப்பில் ஆர்வம் கூடும். உயர் கல்வி என்ற இலக்கை எட்ட முடியும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம் வெளிநாடு என்றும் செல்வீர்.

உடல்நிலை

உடல்நிலையில் சிறு சிறு சங்கடங்கள் பாதிப்புகள் என்று வந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போய்விடும். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். வேலையின் காரணமாக பிரிந்திருந்தவர்களும் ஒன்றாக வாழும் நிலை உண்டாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். ஆடை ஆபரணம் சேரும். சேமிப்பு உயரும். பிள்ளைகளால் பெருமையும் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கும் உண்டாகும்.

பரிகாரம்

கற்பக விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.

பரணி: அதிர்ஷ்ட காலம்

அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், தைரிய வீரிய காரகன் செவ்வாய் அம்சத்தில் பிறந்து உயர்ந்த லட்சியத்தோடு வாழ்ந்துவரும் உங்களுக்கு, மே 26 முதல் உங்கள் ராசிக்கு 4 ம் இடமான கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து, 2027. மே 13 ல் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகிறார் குரு பகவான்.

கடகத்தில் சஞ்சரிக்கும் குரு, இடையில் அஸ்தமனம் அடைவதும், அதிசாரமாக சிம்மத்திற்கு சென்று வக்ரம் அடைந்து வக்ர கதியிலேயே மீண்டும் கடகத்திற்கு வருவதால் அவர் வழங்கும் பலன்களிலும் மாற்றம் இருக்கும். அஸ்தமனம் அடையும் காலத்தில் சஞ்சாரப்பலனையும் பார்வைகளால் வழங்கும் சுபப்பலன்களைகளையும் வழங்க முடியாமல் போகும். அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பூர்வ புண்ணிய பலன்களுடன் யோகப் பலன்களையும் வழங்குவார். உங்கள் ராசி நாதனான செவ்வாய்க்கு குரு நட்பானவர் என்பதுடன் உங்கள் நட்சத்திரத்திற்கு சாதகமான புனர்பூசம், நட்பான ஆயில்யம், அதிநட்பான மகம் நட்சத்திரங்களில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும், கை பட்டதெல்லாம் துளிர்க்கும்.

சஞ்சாரம், பார்வை பலன்

மே 26 அன்று கடக ராசியில் சஞ்சரிக்கும் குரு, தொழில் மற்றும் உத்தியோகத்தின் காரணமாக எதிர்பாராத இடமாற்றத்தை ஏற்படுத்துவார், ஆசையை அதிகரிப்பார், மனதில் சஞ்சலம் உருவாக்குவார். விருப்பப்பட்ட வாகனத்தை வாங்க வைப்பார். நீண்டநாள் கனவுகளையும் முயற்சிகளையும் உங்கள் வசமாக்குவார். இக்காலத்தில்
உங்கள் ராசிக்கு 8 ம் வீடான அஸ்டம ஸ்தானத்தையும், 10 ம் வீடான ஜீவன ஸ்தானத்தையும், 12 ம் வீடான விரய ஸ்தானத்தையும் பார்ப்பதால், முதலில் உங்கள் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நோய் நொடி என்று வாழ்ந்த நிலை மாறும். அவமானத்தால் தலைக்குணிந்து வாழ்ந்து வந்த நிலைமாறி தலைநிமிர்ந்து நடைபோடக்கூடிய நிலை உருவாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். செய்துவரும் தொழில் லாபம்தரும். வியாபாரம் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். செயல்களில் வேகமும் தெளிவும் உண்டாகும். விரயச்செலவுகள் கட்டுப்படும். மனக்குழப்பம் விலகும். விரய சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். 

அக். 20 முதல் சிம்மத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவால், நினைத்ததை சாதிக்க முடியும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். நவீன பொருட்களின் சேர்க்கை ஏற்படும். புதிய வீடு, மனை என்ற கனவு நனவாகும். குழந்தைக்காக தவமிருந்தவர்களுக்கு வரம் கிடைத்ததுபோல் குழந்தைப் பிறக்கும். சிலருக்கு ஆண் குழந்தைப் பிறக்கும். இக்காலத்தில் 9 ம் வீடான பாக்ய ஸ்தானத்தையும், 11 ம் வீடான லாப ஸ்தானத்தையும், 9 ம் பார்வையால் உங்கள் ராசியையும் பார்க்கும் குருவால், நீங்கள் பிறந்த பலனை அடைவீர்கள். நடக்காது என்ற கை விட்ட வேலையெல்லாம் நடக்கும். கிடைக்காது என்று முடிவெடுத்ததெல்லாம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். பட்டம் பதவி என்பதெல்லாம் தேடிவரும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த வேலைகள் நினைத்தபடியே நடக்கும். சிலர் தந்தையின் தொழிலைக் கையில் எடுப்பீர்கள். ஏளனமாகப் பார்த்தவர்களுக்கு மத்தியில் செல்வாக்கோடு நடைபோடுவீர்கள்.

அஸ்தமனம், வக்ர காலங்கள்

ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும். குரு வக்ரமடையும் போது அவர் முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால், சிம்மத்தில் வக்ரமடையும் காலத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் பலன்களையும், கடக ராசியில் சஞ்சரிக்கும்போது மிதுன ராசியில் சஞ்சரிக்கும் பலன்களையும் தன் பார்வைகள் வழியே வழங்கி முன்னேற்றத்தை உண்டாக்குவார். பார்வைகளால் உங்கள் வாழ்க்கையை வளமாக்குவார்.

பொதுப்பலன்

குருப்பார்வைகளும், நவ. 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், 122 நாட்கள் சூரியனும், 3,6,11ம் இடங்களில் செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்களிலும் நீங்கள் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும்.
இடையில் வந்த சங்கடங்கள் போராட்டங்கள் யாவும் விலகும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். புதிய சொத்து சேரும். செல்வாக்கு அந்தஸ்துடன் பணப்புழக்கமும் உண்டாகும்.

தொழில் 

செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் ஆதரவால் தொழில் விருத்தியாகும். ஆடை ஆபரணம் வாகன விற்பனை எலக்ட்ரானிக்ஸ், உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, அழகு சாதனம், நிதிநிறுவனம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மருந்தகம், உணவகம், பெட்ரோலியம், விவசாயம் சார்ந்த தொழில்கள் லாபம்தரும்.

பணியாளர்கள் 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், வழக்குகள் முடிவிற்கு வரும். தள்ளிப்போன பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு  நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.

பெண்கள்

குருப் பார்வைகளால் கௌரவமாக வாழக்கூடிய நிலை உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். இணக்கமான நிலை உண்டாகும். இளம் பெண்களுக்கு படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும். கணவரைப் பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். பொன் பொருள் சேரும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உருவாகும்.

கல்வி

படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்வீர்.

உடல்நிலை

உடல்நிலையில் ஏதேனும் ஒரு பாதிப்பு, எதிர்பாராத விபத்து என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும். மருத்துவச் செலவு குறையும்.

குடும்பம்

குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். டைவர்ஸ் கேட்டு நீதிமன்றம் வரைச் சென்றவர்களும் மனம் மாறுவீர்கள். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். பிள்ளைகளுக்காக சேமிப்பை உருவாக்குவீர்கள். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சி குடியேறுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கென்று தனி மரியாதை ஏற்படும். 

பரிகாரம்

அண்ணாமலையாரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். நினைத்தது நடந்தேறும்.

கார்த்திகை 1ம் பாதம்: முயற்சி வெற்றியாகும்

ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர். பொதுவாகவே உங்களுக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கும். மதிப்போடும் மரியாதையோடும் வாழக்கூடிய நிலை இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 4ம் வீடான கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் நிகழும், இடமாற்றம், தொழில்மாற்றம் என்பதுடன் புதுப்புது முயற்சிகளை முன்னெடுத்து அதில் ஆதாயம் காண்பீர்கள். வீடு, வாகனம், வசதி வாய்ப்புகள் என்று வாழ்க்கை வளமாகும். திருமணம், குழந்தை பாக்யம், பட்டம், பதவி என்ற கனவு நனவாகும்.
2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மே 26 முதல் 3 ம் வீடான கடகத்திலும், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திலும் சஞ்சரிப்பவர், பார்த்துவரும் வேலையில் போராட்டம், செய்துவரும் தொழிலில் நெருக்கடி, நட்பு வட்டத்தில் விரிசல், உறவுகளுடன் பகை,
வருமானத்தில் தடைகளையும், எதிர்பாராத இடமாற்றத்தையும், அலைச்சலையும் ஏற்படுத்துவார். திட்டமிடாமல் சில வேலைகளில் இறங்கி சங்கடத்திற்கு ஆளாக வைப்பார். உங்கள் நட்சத்திராதிபதியான சூரியனுக்கு குரு நட்பானவர் என்பதுடன் சாதக நட்சத்திரமான பூசம் மற்றும் நட்பு நட்சத்திரமான மகத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் உண்டாகும்.

சஞ்சாரம், பார்வை பலன்

1ம் பாதத்தினருக்கு கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 8,10,12 ம் இடங்களையும், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 9,11 மற்றும் ராசியையும் பார்ப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை சீராகும். தொழில் முன்னேற்றமடையும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு முகூர்த்த நாள் முடிவாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கடக்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 7,9,11 ம் இடங்களையும், சிம்மத்தில் சஞ்சரிக்கும்போது 8,10,12 ம் இடங்களையும் பார்ப்பதால் குடும்பத்தில் சுபிட்ச நிலை உண்டாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

அஸ்தமனம், வக்ர காலங்கள்

ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும்.

பொதுப்பலன்

குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால் இக்காலத்தில்  நீங்கள் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.

தொழில் 

தொழிலில் இருந்த தடைகள் நெருக்கடிகள் நீங்கும். நஷ்டத்தால் மூடிவைக்கப்பட்ட தொழில்களையும் மீண்டும் திறந்து லாபம் காணக்கூடிய நிலை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், அலைபேசி, சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம், ஏற்றுமதி இறக்குமதி, கமிஷன் ஏஜென்சி தொழில்கள் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வழக்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் போகும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.

பெண்கள்

தொடர்ந்து போராட்டங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வந்தவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மதிப்பு கூடும். கணவரின் ஆதரவு கிடைக்கும். இளம்பெண்களுக்கு உயர்கல்வி, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். ஆடை ஆபரணம் சேரும்.

கல்வி

படிப்பில் ஆர்வம் கூடும். பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு மருத்துவம், பொறியியல் என்ற லட்சியம் நிறைவேறும்.

உடல்நிலை

பரம்பரை நோய், தொற்றுநோய், விபத்து என்று மருத்துவ மனைக்கு சென்று வந்தவர்கள் ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். தீராமல் இருந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும்.

குடும்பம்

குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை உண்டாகும்.

பரிகாரம்

அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us