sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/குருபெயர்ச்சி பலன்கள்/ரிஷபம்

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

குருப்பெயர்ச்சி பலன்கள் : ரிஷபம்
25 மே 2026 to 07 ஜூன் 2027

முந்தைய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

ரிஷபம்ரிஷபம் 

கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும்

ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர். பொதுவாகவே உங்களுக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கும். மதிப்போடும் மரியாதையோடும் வாழக்கூடிய நிலை இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 4ம் வீடான கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் நிகழும், இடமாற்றம், தொழில்மாற்றம் என்பதுடன் புதுப்புது முயற்சிகளை முன்னெடுத்து அதில் ஆதாயம் காண்பீர்கள். வீடு, வாகனம், வசதி வாய்ப்புகள் என்று வாழ்க்கை வளமாகும். திருமணம், குழந்தை பாக்யம், பட்டம், பதவி என்ற கனவு நனவாகும்.
2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மே 26 முதல் 3 ம் வீடான கடகத்திலும், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திலும் சஞ்சரிப்பவர், பார்த்துவரும் வேலையில் போராட்டம், செய்துவரும் தொழிலில் நெருக்கடி, நட்பு வட்டத்தில் விரிசல், உறவுகளுடன் பகை,
வருமானத்தில் தடைகளையும், எதிர்பாராத இடமாற்றத்தையும், அலைச்சலையும் ஏற்படுத்துவார். திட்டமிடாமல் சில வேலைகளில் இறங்கி சங்கடத்திற்கு ஆளாக வைப்பார். உங்கள் நட்சத்திராதிபதியான சூரியனுக்கு குரு நட்பானவர் என்பதுடன் சாதக நட்சத்திரமான பூசம் மற்றும் நட்பு நட்சத்திரமான மகத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் உண்டாகும்.

சஞ்சாரம், பார்வை பலன்

1ம் பாதத்தினருக்கு கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 8,10,12 ம் இடங்களையும், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 9,11 மற்றும் ராசியையும் பார்ப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை சீராகும். தொழில் முன்னேற்றமடையும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு முகூர்த்த நாள் முடிவாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கடக்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 7,9,11 ம் இடங்களையும், சிம்மத்தில் சஞ்சரிக்கும்போது 8,10,12 ம் இடங்களையும் பார்ப்பதால் குடும்பத்தில் சுபிட்ச நிலை உண்டாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

அஸ்தமனம், வக்ர காலங்கள்

ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும்.

பொதுப்பலன்

குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால் இக்காலத்தில்  நீங்கள் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.

தொழில் 

தொழிலில் இருந்த தடைகள் நெருக்கடிகள் நீங்கும். நஷ்டத்தால் மூடிவைக்கப்பட்ட தொழில்களையும் மீண்டும் திறந்து லாபம் காணக்கூடிய நிலை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், அலைபேசி, சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம், ஏற்றுமதி இறக்குமதி, கமிஷன் ஏஜென்சி தொழில்கள் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வழக்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் போகும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.

பெண்கள்

தொடர்ந்து போராட்டங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வந்தவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மதிப்பு கூடும். கணவரின் ஆதரவு கிடைக்கும். இளம்பெண்களுக்கு உயர்கல்வி, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். ஆடை ஆபரணம் சேரும்.

கல்வி

படிப்பில் ஆர்வம் கூடும். பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு மருத்துவம், பொறியியல் என்ற லட்சியம் நிறைவேறும்.

உடல்நிலை

பரம்பரை நோய், தொற்றுநோய், விபத்து என்று மருத்துவ மனைக்கு சென்று வந்தவர்கள் ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். தீராமல் இருந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும்.

குடும்பம்

குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை உண்டாகும்.

பரிகாரம்

அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

ரோகிணி: செல்வாக்கு உயரும்

மனோ காரகனான சந்திரன், அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்களாவீர். போராட்டம், நெருக்கடி, பிரச்சனைகளையெல்லாம் வென்றிடக்கூடிய சக்தி கொண்ட உங்களுக்கு குரு பகவான் லாபாதிபதி என்பதுடன், உங்களை சுபிட்சமாக வைத்திருப்பவரும் அவரே, மே 26 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, அதிசாரமாக அக். 20 முதல் உங்கள் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக அக். 20 வரை ஒவ்வொரு வேலைக்கும் கடுமையாக முயற்சிக்க வேண்டியதாக இருக்கும். செய்துவரும் தொழிலில் தேக்கம் ஏற்படும். வருமானத்திலும் பின்னடைவு, கடன் தொல்லை, தைரியமாக செயல்பட முடியாத நிலை, குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். அக். 20 முதல் திடீர் இடமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் உழைப்பையும் அதிகரிப்பார் என்பது பொதுவான விதி என்றாலும், உங்கள் நட்சத்திராதிபதியான சந்திரனுக்கு குரு நட்பானவர் என்பதுடன், புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் யோகமான, முன்னேற்றமான பலன்களையே உங்களுக்கு வழங்குவார்.

சஞ்சாரம், பார்வை பலன்

மே 26 அன்று கடகத்தில் சஞ்சரிக்கும் குரு   உங்கள் ராசிக்கு, 7,9,11 ம் இடங்களைப் பார்ப்பதால், குடும்பத்தில் நிம்மதியும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும் இருக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் மனமறிந்து நடந்து கொள்வர். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலர் புதிய இடம் வீடு என்று வாங்குவீர்கள். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைப்பதுடன் உங்கள் செல்வாக்கும் உயரும். வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும் வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். வசதியாக வாழக்கூடிய நிலை உருவாகும். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 8,10,12 ம் இடங்களைப் பார்ப்பதால், உங்கள் திறமை வெளிப்படும். வாய்ப்புகள் தேடிவரும், உடல்நிலை சீராகும், செய்துவரும் வியாபாரம் மற்றும் தொழில் விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும். விரயச்செலவுகளும் அலைச்சலும் குறையும். நிம்மதியான துக்கம் இருக்கும்.

குருப்பார்வைகளால் உங்கள் வாழ்க்கை வளமாகும். எடுக்கும் வேலைகள் யாவும் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கிரகப்பிரவேசம், திருமணம், குழந்தை பாக்யம் என்று வீட்டில் சுபிட்சம் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். நவ. 13 முதல் ஞான மோட்சக்காரகன் கேது சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வற்றிய கிணறும் சுரக்கும். பட்ட மரமும் துளிர்க்கும் என்பதுபோல் உங்கள் வாழ்க்கை நிலை உயரும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும்.

தொழில் 

குருப்பார்வைகளும், தொழில் காரகன் சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் தொழிலில் நஷ்டம், கஷ்டம் என்றிருந்த நிலையெல்லாம் மாறும். சிறிய முதலீட்டிலும் லாபம் அதிகரிக்கும். முடங்கிக்கிடந்த தொழில்கள் வளர்ச்சி அடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாகன உற்பத்தி, உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, அழகு சாதனம், நவீன பொருட்கள் தயாரிப்பு, கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக்ஸ், சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம் வளர்ச்சி அடையும், வேளான் சார்ந்த தொழில்கள் லாபம்தரும்.

பணியாளர்கள் 

வேலையில் ஏற்பட்ட சங்கடங்கள், பயம் எல்லாம் விலகும். சிலர் பார்த்துவரும் வேலையை விட்டு விட்டு வேறு நிறுவனத்திற்கு மாறுவீர்கள். உங்கள் திறமைக்குரிய மரியாதைக்கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். சிலருக்கு வழக்கு சாதகமாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்

இனம் புரியாத குழப்பத்துடன் எதிர்பார்த்த எந்த ஒன்றும் நடக்கவில்லையே என்ற மன வருத்தத்துடன் வாழ்ந்து வந்தவர்களுக்கு குருப்பார்வைகள் யோகத்தை உண்டாக்கும். குடும்பத்திலும் வேலைப்பார்க்கும் இடத்திலும் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு விலகும். உடலில் இருந்த சங்கடங்கள் குறையும். ஆரோக்கியமாக நடைபோட முடியும். இளம் பெண்களுக்கு உயர்கல்வி, வேலை, திருமணம், அந்தஸ்து என்ற கனவுகள் நனவாகும். கணவரை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும்.

கல்வி

குருப் பார்வைகள் சாதகமாக இருப்பதால் மாணவர்கள் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். கல்வியின் அவசியம் புரியும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை

வேலை பளுவாலும், மன உளைச்சலாலும் பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கும், பரம்பரை நோய், தொற்றுநோய் என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கும் நிலை மாறும். உடல்நிலை சீராகும். சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள்.

குடும்பம்

பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கி நிலைமைகளை சமாளித்து வந்தவர்களுக்கு இனி நிம்மதியான நிலை உருவாகும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க முடியும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். உறவினர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் வளர்ச்சி இருக்கும்.

பரிகாரம் 

உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். வேண்டுதல் பலிதமாகும்.

மிருகசீரிடம் 1,2: நல்லதே நடக்கும்

தைரிய வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். எடுத்த முயற்சியில் உறுதியாக இருக்கும் உங்களால் நினைத்ததை சாதிக்க முடியும். குறிக்கோளை எட்ட முடியும்.

மிருகசீரிடம் 1,2ம்  பாதத்தினருக்கு மே 26 முதல் 3 ம் வீடான கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 4 ம் வீடான சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவால், செய்துவரும் தொழிலில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். பணியாளர்களுக்கு பார்த்துவரும் வேலை நிலைக்குமா என்ற பயம் உண்டாகும். வருமானத்தில் எதிர்பாராத தடை ஏற்படும். எடுத்த வேலையை முடிக்க முடியாத அளவிற்கு சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராகும். மனதில் இனம்புரியாத பயமும், உங்களுக்கு கீழானவர்களால் சிலர் அவமானத்தையும் சந்திக்க நேரும். உழைப்பின் காரணமாக உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும் என்பதால் அனைத்திலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமிது. 3,4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2 ம் வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், அக். 20 முதல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 3 ம் இடமான சிம்மத்திலும் சஞ்சரிப்பவர், உங்கள் நிலையை உயர்த்துவார், செல்வம், செல்வாக்கு அந்தஸ்தோடு வாழ வைப்பார். எடுக்கும் வேலைகளில் வேகம் இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலைக்கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். எதிலும் வெற்றி என்ற நிலையுடன் எதிர்பாராத பண வரவும் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனதில் நிம்மதியான நிலை இருக்கும். அக். 20 முதல் அனைத்திலும் நிதானம் தேவை. இவையெல்லாம்  பொதுப்பலன்கள் என்றாலும் உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய் குருவிற்கு நட்பானவர் என்பதால் உங்கள் நிலையில் குரு முன்னேற்றத்தையே ஏற்படுத்துவார். தாரா பலன் அடிப்படையில் ஷேம தாரையான பூசத்திலும், சாதகத் தாரையான மகத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்களை அதிகரிப்பார்.

சஞ்சாரம், பார்வை பலன்

குரு 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகருக்கு யோகப்பலன்களை வழங்குவார். ஆனால், அவருடைய பார்வைகள்படும் இடங்கள் எல்லாம் யோகத்தை உண்டாக்கும். 1,2ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 7,9,11 ம் இடங்களையும், அக். 20 முதல் 8,10,12 ம் இடங்களையும் குரு பார்ப்பதால், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். புதிய இடம், வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில் லாபம்தரும். திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை சீராகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். செய்துவரும் தொழில் லாபம்தரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விரயச்செலவுகள், அலைச்சல் குறையும். 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 6,8,10ம் இடங்களையும், அக். 20 முதல் 7,9,11ம் இடங்களையும் குரு பார்ப்பதால், வம்பு, வழக்கு, நோய் நொடி என்றிருந்த நிலைகள் மாறும். செல்வாக்கு உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பட்டம் பதவி என்ற கனவுகள் நனவாகும். திருமண வயதினருக்கு திருமணம், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, கூட்டுத்தொழிலில் ஆதாயம், புதிய சொத்து, வியாபாரம் தொழிலில் முன்னேற்றம். பணப்புழக்கம் என்று வாழ்க்கை வளமாகும்.

உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும். செல்வாக்கு உயரும். வசதி வாய்ப்புகள் உருவாகும். வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும்.

தொழில் 

தொழில் மற்றும் லாப ஸ்தானங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால் இதுவரை இருந்த தடைகள் விலகும். முடங்கிக்கிடந்த தொழில்கள் வளர்ச்சி அடையும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், கேட்டரிங், ஆடை ஆபரணம், மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதிநிறுவனம், பங்கு வர்த்தகம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள் 

வேலைப் பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். ஆட்குறைப்பின் காரணமாக வேலைப் போய்விடுமோ என்ற பயம் விலகும். நிர்வாகத்தின் ஆதரவும் சலுகைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். செல்வாக்கு உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த நிலை மாறும். கணவரின் ஆதரவு உங்களை மதிப்போடு வாழ வைக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். இளம்பெண்களுக்கு உயர்கல்வி, வேலை, திருமணம் என அவரவர் கனவு நனவாகும். உடல்நிலை சீரடையும்.

கல்வி 

படிப்பில் ஆர்வம் கூடும். உங்கள் திறமையைக் கண்டு பெற்றோர்கள் நீங்கள் விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்ப்பார்கள். சிலர் உயர் கல்விக்காக வெளி மாநிலம் வெளிநாடு என்றும் செல்வீர்.

உடல்நிலை

உடல்நிலையில் தோன்றிய சங்கடங்கடங்கள் விலகும். விபத்து, கடுமையான பாதிப்பு என்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் நலமடைந்து வீடு திரும்புவீர்கள். உடல்நிலையின் காரணமாக உங்களுக்கேற்பட்ட பயம் போகும்.

குடும்பம்

குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும் கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும் பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும் சொந்த வீடு வாகனம் என்ற கனவு நலவா குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும் வசதி வாய்ப்புகள அதிகரிக்கும்.

பரிகாரம்

அங்காள பரமேஸ்வரியை வழிபட வாழ்வில்  இருந்த சங்கடம் நீங்கும்.
.........

Advertisement

Advertisement Tariff

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us