sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

குருபெயர்ச்சி பலன்கள்

/

தனுசு

/

தனுசு

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

குருப்பெயர்ச்சி பலன்கள் : தனுசு
19 அக் 2019 to 30 அக் 2020

முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

தனுசுகுருபகவான் தற்போது  உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். இது சிறப்பான இடம் எனச் சொல்ல முடியாது. ஆனாலும் அவர் 12ம் இடத்தில் இருந்தது போல கெடுபலன் செய்ய மாட்டார். குரு1 ம் இடத்தில் இருக்கும் போது கலகம், விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் கூறுவதுண்டு. ஆனாலும் கவலைப்பட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. குருவின் பார்வை பலத்தால் மனைவியால் நன்மை காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமையும் கிடைக்கும். அவர் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிசாரம் பெற்று மகர ராசியில் இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மைகள் கிடைக்கும். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமாக இல்லாத காலக்கட்டம். முயற்சியில் அவ்வப்போது தடைகள் குறுக்கிடும். அதை சற்று முயற்சி எடுத்து முறியடிப்பீர்கள். பண வரவுக்கு தகுந்தாற் போல் செலவும் இருக்கும். வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். ஆடம்பரச் செலவை குறைப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளால் பிரச்னை வரலாம். குருவின் பார்வை பலத்தால் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். குருவின் 5ம் இடத்துப் பார்வையால்  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும்.  சிலருக்கு வீடு,  வாகனம் வாங்க யோகம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில்  இருப்பதை சிறப்பாக நடத்துவதே நல்லது. வீண் விரயம் ஏற்படலாம். செலவில் சிக்கனம் தேவை. எதிரிகள் தொல்லை இருக்கத் தான் செய்யும். குருவின் பார்வை பலத்தால் லாபம் சீராக கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை7 வரை  அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
தொழிலில் லாபம் குறையாது. கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.  பணியாளர்களுக்கு வேலைப் பளுவும் அலைச்சலும் இருக்கும். அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும். இருப்பினும் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையிருக்காது. பணியிடத்தில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். இருப்பினும் குருவின் 7ம் இடத்துப் பார்வையால் பின்தங்கிய நிலை மறையும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. 2020 ஆக.31க்கு பிறகு அரசியல்வாதிகளுக்கு பணப் புழக்கம் இருந்தாலும் எதிர்பார்த்த பதவி கிடைக்காது.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம் கவனம் தேவை. ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது. இருப்பினும் குருவின் பார்வையால் போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். விரும்பிய நிறுவனத்தில் இடம் கிடைக்கப் பெறுவீர்கள். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.   

விவசாயிகள்  சீரான வளர்ச்சி காண்பர். உழைப்பே உங்கள் முதலீடு. அனாவசிய செலவை குறையுங்கள். யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். முக்கிய பணிகளை  நேரடி மேற்பார்வையில் மேற்கொள்வது நல்லது. மானாவாரி பயிரில் நல்ல மகசூல் கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை கால்நடை வளர்ப்பால் நல்ல வருமானம் கிடைக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும்.

பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் பொறுமையாக இருக்கவும். பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். குருவின் பார்வையால் சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தம்பதியிடையே ஒற்றுமை  மேம்படும். சகோதரரால் உதவி கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை பெண்களுக்கு   உறவினர் வகையில் இருந்த பிரச்னை மறையும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் சரணடையும் நிலை உருவாகும்.

பரிகாரம்:
*  சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு
*  செவ்வாய்கிழமை முருகனுக்கு அர்ச்சனை
*  திங்கள்கிழமை அம்மனுக்கு நெய் விளக்கு

Advertisement

Advertisement Tariff

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us