குருபெயர்ச்சி பலன்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள் : விருச்சிகம்
25 மே 2026 to 07 ஜூன் 2027
முந்தைய குருபெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம்விருச்சிகம்
விசாகம் 4: உழைப்பால் முன்னேற்றம்
மங்களக்காரகன், ஞானக்காரகனான குரு பகவானை நட்சத்திர அதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். சமூகத்தில் தனித்துவத்துடன், பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வருபவர்கள் நீங்கள். எங்கு இருந்தாலும் அங்கு உங்கள் வார்த்தைக்கு தனி மதிப்பிருக்கும்.
விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் தொழில் ஸ்தானமான 10 ம் இடத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 முதல் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதால், மே 26 முதல், செய்துவரும் தொழிலில் நெருக்கடியும், போராட்டமும், பார்த்துவரும் வேலையில் பிரச்சனைகளும், பண வரவில் தடைகளும், உறவினர்களுடன் இடைவெளியும், ஆரோக்கியத்தில் சங்கடங்களும் ஏற்படும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் இல்லாமல் போகும். அக். 20 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் நீங்கள் நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சி அடையும். பணவரவு அதிகரிக்கும். மதிப்பு, கௌரவம், செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு தேடிவரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். விசாகம் 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்திலும், அக். 20 முதல் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவுகள் நனவாகும், பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் எல்லாம் தேடிவரும். பொன் பொருள் சேரும், குடும்பத்திலும் வேலையிலும் நிம்மதியான நிலை ஏற்படும். அக். 20 முதல் பொருளாதார நெருக்கடி, உத்தியோகத்தில் பிரச்சனை, தொழிலில் மந்தமான நிலை ஏற்படும்.
உங்கள் நட்சத்திராதிபதியே குரு என்பதால் உங்களுக்கு சங்கடங்கள் வரும்போதெல்லாம் அவரே உங்களைப் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஷேமம் மற்றும் ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும்போது நன்மைகள் கூடும். வாழ்க்கை வளமாகும்.
சஞ்சாரம், பார்வை பலன்
குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப அவர் சஞ்சரிக்கும் இடங்களுக்கு எதிர்மறையான பலன்களை வழங்கினாலும் பார்க்கும் இடங்களுக்கு சுபிட்சத்தையே ஏற்படுத்துவார். விசாகம் 1,2,3, ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2,4,6 ம் இடங்களைக் குரு பார்ப்பதால்,
குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். பணம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். நோய்கள் விலகும். விரோதிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும் வழக்குகள் சாதகமாகும்.
அக். 20 முதல் 3,5,7 ம் இடங்களைக் குரு பார்ப்பதால்,
உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் புரிவோருக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். பணம், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உயர் கல்வி கனவு நனவாகும்.
விசாகம் 4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் ஜென்ம ராசிக்கும், 3, 5 ம் இடங்களுக்கும் குருப்பார்வை உண்டாவதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பட்டம் பதவி தேடிவரும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். அக். 20 முதல் 2,4,6 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால், குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கி நிம்மதியான நிலை உண்டாகும். கையில் பணம் புரளும், சேமிப்பு உயரும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும்.
அஸ்தமனம், வக்ர காலங்கள்
ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும்.
பொதுப்பலன்
விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு லாப கேதுவும், 6 ம் இட சனியும், அக். 20 முதல் லாப குருவும், 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பாக்ய குருவும், நவ. 13 முதல் சகாய ராகுவும் யோகப் பலன்களை வழங்குவர். குருப்பார்வைகள் நன்மைகளை வழங்கும் என்பதால் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கள். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
தொழில்
தெளிவான முடிவெடுத்து திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் ஏஜன்சி, பங்கு வர்த்தகம், ரசாயன தொழில்கள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல்ஸ், பில்டிங் டிசைனிங் அண்ட் டெக்கரேஷன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, கம்ப்யூட்டர், குளிர்பானம், மினரல் வாட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், நவீன சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்
வேலைப்பார்க்கும் இடத்தில் வேலைபளு அதிகரித்தாலும் அதற்குரிய சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு தற்போதுள்ள இடத்தை விட வேறு இடத்தில் எதிர்பார்த்த ஊதியத்துடனும் சலுகைகளுடனும் தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். தடைபட்ட இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்
பெண்கள்
எடுத்த வேலைகளை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, உடல்நிலையும் மனநிலையும் மேம்படும். குடும்பத்தில் மதிப்பு கூடும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கணவரின் ஆதரவு கிடைக்கும். கையிருப்பு கூடும். பொன் பொருள் சேரும். உறவுகள் மத்தியில் மதிப்புடன் வாழக்கூடிய நிலை உருவாகும்.
கல்வி
குரு பகவானின் அருள் பெற்ற உங்களுக்கு இயல்பாகவே படிப்பின் மீது அக்கறையும் ஆர்வமும் இருக்கும். பொதுத்தேர்வில் போட்டித்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். பொறியியல், மருத்துவம், சட்டம் என்று விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருத்துவச்செலவு குறையும். மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வந்தவர்கள் நிலை மாறும். ஆரோக்கியமாக நடை போடக்கூடிய நிலை உருவாகும்.
குடும்பம்
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய அக்கறை அதிகரிக்கும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு சிலருக்கு நனவாகும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.
பரிகாரம்
ஆபத் சகாயேஸ்வரரை வழிபட நன்மைகள் நடந்தேறும். வேண்டுதல் பலிதமாகும்.
அனுஷம்: செல்வாக்கு உயரும்
கர்மக்காரகன் சனியை நட்சத்திர அதிபதியாகவும், தைரிய வீரிய காரகனான செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் அச்சம் என்பதை அறியாதவர்கள், ஆற்றல் மிக்கவர்கள், மற்றவரால் செய்ய முடியாத வேலைகளை முடித்துக் காட்டுவதில் வல்லவர்கள். நிதானமாக செயல்பட்டாலும் நினைத்ததை சாதிக்கும் திறன்கொண்ட உங்களுக்கு, மே 26 முதல் உங்கள் பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, அக். 20 முதல் உங்கள் ராசிக்கு 10 ம் வீடான ஜீவன ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார்.
இதுவரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து அல்லல்களை வழங்கி வந்த குரு, மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு யோக காலம் ஆரம்பித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஒன்பதாம் இடம் என்பது பிதுர் ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தர்ம ஸ்தானம் ஆகும் இந்த இடத்தை வைத்துதான் அரசாங்கத்தால் தந்தையால் அடையக்கூடிய நன்மையை தெரிந்து கொள்ளலாம். கிடைக்கப் போகும் பாக்யம், செய்யப் போகும் புண்ணிய செயல்களை தெரிந்து கொள்ளலாம். 9 ம் இடத்திற்கு வரும் குரு பகவான் முதலில் உங்கள் உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். மன நிலையில் தெளிவை உண்டாக்குவார். தைரியமாக நடைபோட வைப்பார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். பகைவர்களை உங்களிடம் சரணடைய வைப்பார். திருமணம் கூடி வரவில்லையே என்ற கவலையை தீர்ப்பார். வீட்டில் மங்கள வாத்தியம் கேட்பதுடன், சிலருக்கு குழந்தை பாக்யமும் ஏற்படும். வாழ்க்கை, தொழில், அந்தஸ்து உயரும். பொன் பொருள் சேரும். அக். 20 முதல் உங்கள் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, செய்துவரும் தொழிலில் அக்கறையை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். தற்போது பார்த்துவரும் வேலையைவிட உயர்வான வேலைக்கு மாற்றம் செய்வார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். வருமானத்திற்குரிய வழிகளை ஏற்படுத்துவார்.
உங்கள் நட்சத்திராதிபதி சனியும் ராசியாதிபதி செவ்வாயும் குருவிற்கு நட்பானவர்கள் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி அதிநட்பு மற்றும் ஸம்பத் தாரைகள் என்பதால் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப் பலன்கள் அதிகரிக்கும். நன்மைகள் கூடும்.
சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்
குரு தான் சஞ்சரிக்கும் ராசியிலிருந்து 5,7,9ம் பார்வைகளால் பார்க்கும் இடங்கள் சிறப்படையும் என்பதால், மே 26 முதல் உங்கள் ஜென்ம ராசியையும், 3, 5 ம் இடங்களையும் குரு பார்ப்பதால் போராட்டமாகவும் பிரச்சனையாகவும் இருந்த உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சொத்து சுகம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். குழந்தைக்காக தவம் இருந்தவர்களுக்கு வரம் கிடைத்ததுபோல் குழந்தை பாக்யம் கிடைக்கும். அக். 20 முதல் உங்கள் ராசிக்கு 2,4,6 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால்,
பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி, மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு வாகனம் என்ற முயற்சி வெற்றியாகும். எதிர்ப்பு போட்டி என்பதெல்லாம் இல்லாமல் போகும். வழக்கு விவகாரம் வெற்றியாகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்

மே 26 முதல் பாக்ய குருவும், நவ. 13 முதல் சகாய ராகுவும், 3,6,10,11 ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் 120 நாட்களும் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
தொழில்
தொழில் காரகனான சனி பகவானே உங்கள் நட்சத்திர அதிபதி என்பதால் சுய தொழிலில் ஆதாயம் காணக்கூடியவர்கள் நீங்கள். செய்யும் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்து முன்னேற்றம் அடையக்கூடியவர்கள். விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், செங்கல் தயாரிப்பு, எம்சாண்ட், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், சிறு குறு தொழிற்சாலைகள், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், இன்ஜினியரிங் பேக்டரி, உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, வாகன விற்பனை, கெமிக்கல், மருத்துவம் மற்றும் மருத்துவம சார்ந்த தொழில்கள், விளையாட்டுப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை, கம்ப்யூட்டர், பொறியியல், டிராவல் ஏஜென்சி, ஹார்ட்வேர் தொழில்கள் லாபம் தரும்.
பணியாளர்கள்
கடுமையாக உழைத்தும் முன்னேற்றம் இல்லையே என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். வேலை மீதிருந்த பயம் போகும். நிர்வாகத்தின் ஆதரவும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்துவரும் சிலர் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலை உருவாகும்.
பெண்கள்
மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும், நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். முன்னேற்றத்தை உண்டாக்குவர். செல்வாக்கோடு நடைபோட வைப்பர் என்பதால், உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வேலையில் உயர்வு என்று அவரவர் நிலைக்கேற்ப உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். ஆடை ஆபரணம் சேரும். ஆரோக்கியம் சீராகும்.
கல்வி
மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதுடன், ராசிக்கும் குருப்பார்வை உண்டாவதால் மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர்கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை
நோய் நொடி, விபத்து, மருத்துவச்செலவு என்று நாட்களை நகர்த்தி வந்தவர்களுக்கு பாக்ய குருவின் பார்வை உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமாக நடைபோட வைக்கும். மருத்துவச்செலவுகள் குறையும்.
குடும்பம்
வருமானக் குறைவின் காரணமாகவும், உறவினர்கள் தலையீட்டினாலும் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி குழப்பம் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாவதுடன் குடும்பத்தின் மீது அக்கறையும் அதிகரிக்கும். மற்றவர்களைப்போல் வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் சிலர் கடன் பட்டாவது சொந்த வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்வீர்கள்.
பரிகாரம்
திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடங்கள் விலகும். வேண்டுதல் பலிதமாகும்.
கேட்டை: குருப்பார்வை வந்தாச்சு
வித்யாகாரகன் புதனை நட்சத்திர அதிபதியாகவும், ரத்தக்காரகன், யுத்தக் காரகனான செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் சாதுரியமாக செயல்படக்கூடியவர்கள், நினைத்ததை சாதிப்பதில் உறுதியானவர்கள். எந்த ஒன்றையும் நுட்பமாக அறிந்து செயல்படுவதுடன் அதில் வெற்றியும் பெறக்கூடியவர்களான உங்களுக்கு, மே 26 முதல் குரு பாக்ய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்தும், அக். 20 முதல் ஜீவன ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரித்தும் பலன்களை வழங்கிட இருக்கிறார்.
விவேகம், வித்தை அந்தஸ்திற்கு காரகனான குரு, பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் யோகப்பலன்களை வழங்குவார் என்பது பொது விதி. மே 26 முதல் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு வாகனம் சேரும். புத்திர பாக்யம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை இருக்கும். நினைத்ததை சாதித்திடக்கூடிய அளவிற்கு சூழ்நிலைகள் சாதகமாகும். அக். 20 முதல் உங்களுடைய ராசிக்கு ஜீவன ஸ்தானமான சிம்ம ராசிக்குள் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவால் பலன்கள் மாறுபடும். எல்லாவற்றையும் எளிதாக நடத்தி லாபம் கண்டுவந்த நிலைமாறி ஒவ்வொன்றுக்காகவும் போராட வேண்டியதாக இருக்கும். முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். தொழிலில் மந்தநிலை ஏற்படும். வேலையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வருமானம் தடைபடும். மனதில் குழப்பம் அதிகரிக்கும் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதெல்லாம் பொது விதியாகும்.
உங்கள் நட்சத்திராதிபதி புதன் குருவிற்கு பகையானவர் என்றாலும் ராசியாதிபதி செவ்வாய் நட்பானவர் என்பதுடன், உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியும் குருவே என்பதால் உங்கள் குடும்ப வாழ்க்கை சுபிட்சமாகவே இருக்கும். பணப்புழக்கமும் இருந்து கொண்டிருக்கும். அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி நட்பு, அதிநட்பு, ஸம்பத் தாரைகள் என்பதால் புனர்பூசம், பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப் பலன்களையே வழங்குவார்.
சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்
குரு பார்க்கும் இடங்கள் சிறப்படையும் என்பது விதி. மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியையும், 3, 5 ம் இடங்களையும் பார்ப்பதால், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசிக்கு 2,4,6 ம் இடங்களைப் பார்ப்பதால், பொருளாதார நெருக்கடி நீங்கும். தேவைக்கேற்ற பணம்வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பழைய கடன்கள் அடைபடும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு போட்டி என்பதெல்லாம் இல்லாமல் போகும். வழக்கு விவகாரம் வெற்றியாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும்.

போராட்டமும் பிரச்சனையாகவும் இருந்த நிலை மாறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். வியாபாரம் தொழில் லாபம்தரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
தொழில்
புதனை நட்சத்திராதிபதியாக கொண்ட நீங்கள் எதிலும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள் மட்டும் அல்ல, எந்த ஒன்றாக இருந்தாலும் அதில் எப்படி வெற்றி பெறுவது என்பதை அறிந்தவர்கள். பொதுவாக தொழில் துறையில் சாதித்திடக்கூடியவர்கள் நீங்கள். சிறு வியாபாரம், பெரும் வர்த்தகம், நிதி நிறுவனம், ஸ்டேஷனரி, அச்சகம், செய்தித்தாள், நோட்டுப் புத்தகம் காலண்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை, தகவல் தொடர்பு, விளம்பரம், ஷேர் மார்க்கெட், காண்ட்ராக்ட், கூட்டுத்தொழில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், மருத்துவம், ரசாயனம், டிராவல் ஏஜென்சி, தனியார் பள்ளிகள் கல்லூரிகள் வளர்ச்சி அடையும். லாபம் தரும்.
பணியாளர்கள்
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடி விலகும். பார்க்கும் வேலைப் பறிபோய்விடுமோ என்றிருந்த பயம்நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளுடன் உங்களுக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் தேடிவரும்.
பெண்கள்
குடும்பத்தில் நிம்மதி இல்லை, உடல் நிலையில் பிரச்சனை, எந்த ஒன்றும் கைகூடி வரவில்லை என்றிருந்த நிலையெல்லாம்
மே 26 முதல் மாறும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். கணவரின் புரிதலால் துணிச்சலாக செயல்படுவீர்கள். சிலருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்யம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்வீர்கள்.
கல்வி
வித்யாகாரகன் புதனை நட்சத்திர அதிபதியாக கொண்ட உங்களுக்கு இயல்பாகவே படிப்பில் ஆர்வமும் அக்கறையும் இருக்கும். மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
ராசியை விட்டு ஆயுள்காரகன் சனியின் பார்வை விலகி விட்டதாலும், ராசிக்கு மே 26 முதல் குருப்பார்வை உண்டாவதுடன், நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்து உங்களை சுறுசுறுப்பாக நடைபோடக்கூடிய நிலையை உருவாக்க இருப்பதாலும், மருந்து, மாத்திரை, மருத்துவமனை என்று தொடர்ந்து சங்கடப்பட்டு வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். சிலர் நவீன மருத்துவத்தால் ஆபத்திலிருந்து மீண்டு வருவீர்கள்.
குடும்பம்
திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனையும், சொத்து சேர்ப்பதில் ஆர்வமும், சேமிப்பில் கவனமும் செல்லும். குடும்பத்தில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். உறவினர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.
பரிகாரம்
லட்சுமி நாராயணரை வழிபட நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.