sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

/

மேஷம்

/

மேஷம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : மேஷம்
04 பிப் 2019 to 21 ஆக 2020

முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

மேஷம்ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன் தருவர்.  காரணம் ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார். இப்போது ராகு 3ம் இடமான மிதுன ராசிக்கு வருவதால் செயல் வெற்றி, நற்சுகம், பொருளாதார வளம் தருவார். கேது 9ம் இடமான தனுசு ராசிக்கு போகிறார்.  ஆரோக்கியம் மேம்படும். அதே நேரம் கேதுவால் பொருள் இழப்பு, முயற்சியில் தடை ஏற்படலாம் உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் இருக்கும் குருபகவான் மன வேதனை, நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். ஆனால் அவரது 7ம் பார்வையால் இடையூறுகளை முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். சனிபகவான் தனுசு ராசியில் இருப்பதால் எதிரி தொல்லை தலைதூக்கும். மொத்தத்தில் உங்களின் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் கிடைக்கும்.

2019 பிப்ரவரி – அக்டோபர்

பொருளாதார வளம் சிறப்படையும். தேவை பூர்த்தியாகும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். புதிய வாகனங்கள் வாங்க யோகமுண்டு. அதற்காக கடன் வாங்கும் நிலை உருவாகலாம். முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு வரலாம்.   

பணியாளர்களுக்கு  கடந்த காலத்தைப் போல அனுகூலம் உண்டாகும்.சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.  வியாபாரிகள்  பண விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.  ராகுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும்.  சிலர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வர்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காது.  அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கப் பெறலாம். மாணவர்களுக்கு கல்வி வளம் பெருகும்.

ஆசிரியர்களின் மத்தியில் மதிப்பு உயரும். மே 19 முதல் அக்.26 வரை சகமாணவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது.

விவசாயிகள் நவீனகருவிகளைப் பயன்படுத்தி வளம் காணலாம். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமையும்.  புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.

பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். பெண் குழந்தைகளால் பெருமை கிடைக்கும்.

2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்
குருவால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.  நினைத்தது நிறைவேறும்.

பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காணலாம். வேலைப்பளு குறையும்.  2020 மார்ச் 26 க்குப் பிறகு வேலையில் பொறுமை, நிதானம் தேவை.  குருவின் பார்வையால் வழக்கமான சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. வியாபாரிகள்  பண விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். ஆனால் சனிபகவானின் 10 பார்வையால்  பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். ராகுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். 2020 மார்ச் 26 க்கு பிறகு சுமாரான லாபம் கிடைக்கும்.

கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். 2020 மார்ச் 26க்குப் பின் முயற்சியில் தடை, மனதில் சோர்வு ஏற்படலாம்.

அரசியல்வாதிகள்,  நல்ல வசதியுடன் இருப்பர்.மாணவர்களுக்கு இது நன்மை தரும் காலம்.  2020 மார்ச் 26க்கு பிறகு மனக்குழப்பம் ஏற்படலாம்.

விவசாயிகளுக்கு கால்நடைகள் வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு.

பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தோடு புனித  தலங்களுக்கு செல்வீர்கள்.  பணிக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.

பரிகாரம்:
* சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
* சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம்
* சனியன்று ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை

Advertisement

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us