sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

/

ரிஷபம்

/

ரிஷபம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : ரிஷபம்
22 ஆக 2020 to 16 மார் 2022

முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

ரிஷபம்ராகு, கேதுவால் சரிசம பங்கு பலன் கிடைக்கும். வாழ்வில் பல மாறுதல் ஏற்படும். 2ம் இடத்தில் இருந்த ராகு ஜென்மராசிக்கு வருகிறார். எந்த செயலையும் பிரமாதமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகும். சிறிய விஷயத்தையும் பெரிதாக எண்ணி செயல்படுவீர்கள். நீங்கள் அவசரப்பட்டு செயல்படுவதாக பிறருக்குத் தோன்றும். வீட்டை அலங்காரமாக வைப்பதில் ஆர்வம் ஏற்படும்.  யாரும் குறை சொல்லி விடக்கூடாது என்பதில் குறியாக இருப்பீர்கள்.

குடும்பம்:  ராசியில் ராகுவும், ஏழில் கேதுவும் அமர்வதால் தம்பதியருக்குள் அவ்வப்போது கருத்துவேறுபாடு தோன்றி மறையும். வாழ்க்கைத்துணை துவளும் நேரத்தில் தூண்டுகோலாய் இருந்து செயல்பட வேண்டியிருக்கும். அவரது உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. அவரது பெயரில் இருக்கும் சொத்து உருமாறக்கூடும். குடும்பத்தினருடன்  செலவழிக்கும் நேரம் குறையும். உங்களின் வளர்ச்சி கண்டு உறவினர் பொறாமைப்படலாம். அவர்களால் கலகம், விரோதம் ஏற்படலாம். உடன்பிறந்தோரால் பிரச்னை வரலாம். உங்கள் தரப்பு நியாயம் எடுபடாமல் போகும். மற்றவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

தொழில்: அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பிரச்னை வரலாம். துணிவுடன்  மனதிற்கு சரியென தோன்றியதை தயங்காது செய்வீர்கள்.  தோல்வி உண்டாகும் எனத் தெரிந்தே ஒருவிஷயத்தில் தைரியத்துடன் இறங்குவீர்கள். இதனால் பிறர் கேலிக்கு ஆளாகலாம். பிடிவாதம் கொண்ட நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 7ம் இடம் வரும் கேதுவால் எதிரியை வெல்வீர்கள். மறைமுக எதிரி காணாமல் போவர். தொழில்முறை நண்பர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். பணியாளர்கள் அலைச்சல், உடல் அசதியால் சிரமப்படுவர். இருப்பினும் பதவிஉயர்வு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்புண்டு. ஷேர், கமிஷன், தரகு, ஏஜன்சீஸ் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் அடைவர். சிறுதொழில் புரிவோர் ஓய்வின்றி உழைக்க நேரிடும். அரசுப் பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். அலுவலகத்தில் பிறர் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க நேரிடும். அதிகாரிகளோடு கருத்து வேறுபாடு வரலாம். நிதானமுடன் அனைவரையும் அனுசரிப்பது அவசியம். மருத்துவம், ராணுவம், போக்குவரத்து துறையினர் ஏற்றம் காண்பர்.ஒன்றரை ஆண்டு காலமும் நிதானம் அவசியம்.

நிதி நிலை:  நீசபலத்துடன் அமரும் ராகு நினைத்ததை அடைய குறுக்குவழிகளை சிந்திக்கச் செய்வார். மனதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பண விஷயத்தில் புதியவர்களை நம்ப வேண்டாம். மாற்று மதத்தினருடன் நிதி, நிர்வாக விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை. பேராசை பெருநஷ்டம் என்பதை உணர்ந்தால் நிம்மதியுடன் இருக்கலாம். இந்த ஒன்றரை ஆண்டும் சீரான பணவரவு இருக்கும்.

பெண்கள்:  நினைத்ததை நிறைவேற்ற வேகமாக செயல்படுவீர்கள். பெரியவர்களின் ஆலோசனையை ஏற்காமல் வருத்தத்திற்கு ஆளாகலாம். தங்கம், வெள்ளி நகைகள் சேர்க்க முக்கியத்துவம் கொடுப்பர். கணவருடன் ஆலோசித்து செயல்படுவது நல்லது.

மாணவர்கள்:  ராசிக்கு ராகு வருவதால் அறிவு வளரும்.  பெரியோர்களுடன் விவாதம் செய்வீர்கள். கல்வியில் வளர்ச்சி ஏற்படும். திறமைகளை வளர்த்துக் கொண்டால் தரத்தேர்ச்சி பெறுவது நிச்சயம்.  சட்டம் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி, அக்கவுண்டன்சி, காமர்ஸ், கணித துறையினர் முன்னேற்றம் காண்பர்.

உடல்நிலை: உடல்நிலை சீராக இருக்கும். வாயு பிடிப்பு, அலர்ஜி. தொற்றுவியாதிக்கு ஆளாகலாம். ராகுவால் சிலருக்கு தோல்நோய் வரலாம். அடிக்கடி மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

பரிகாரம்:
* திங்கட்கிழமையில் சிவனுக்கு அர்ச்சனை   
* வெள்ளியன்று துர்கைக்கு நெய் விளக்கு
* அமாவாசை மகிஷாசுரமர்த்தினி வழிபாடு

Advertisement

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us