sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

சனிப்பெயர்ச்சி பலன்கள்

/

சிம்மம்

/

சிம்மம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் : சிம்மம்
04 மார் 2026 to 22 மார் 2028

முந்தைய சனிப்பெயர்ச்சி பலன்கள்

rasi

சிம்மம் :

மகம்: விழிப்புணர்வு அவசியம்

ஞான மோட்சக்காரகன் கேது, ஆத்மக்காரகன் சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் பிரச்சனை, அலைச்சல், தவறான நண்பர்களால் சங்கடம், குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய நிலை, எதிர்பாலினரால் செய்துவரும் வேலையில் குழப்பம், தடைகள், பிரச்சனைகள், வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் பாதிப்பு என்று உங்களை சங்கடப்படுத்தி வந்த சனி பகவான், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான மீன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். சனி பகவான் ஏழரைச்சனி காலத்தில் ஒருவருக்கு கொடுக்கும் சங்கடப்பலன்களை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மொத்தமாக வழங்கிடுவார் என்பது பொது விதி என்பதால், இக்காலத்தில் வீண் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவுரவக்குறைவு ஏற்படும். எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். ஒவ்வொன்றிலும் தடை, தாமதம் என்ற நிலை ஏற்படும். எதிரிகள் உங்கள் பலவீனத்தை அறிந்து மோதுவர். மறைமுகத்தொல்லைகள் அதிகரிக்கும். உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். சிலருக்கு குடும்பத்தை வெளியூரில் சென்று வாழும் நிலையும் ஏற்படும். வம்பு, வழக்கு, அவமானம் என்ற நிலைக்கும் ஆளாக வேண்டிவரும். சனி பகவானின் பார்வைகளும் 2,5,10 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் பிரச்சனை, வரவில் தடை, பிள்ளைகளால் கவலை, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் சங்கடங்கள் ஏற்படும் என்றாலும், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்தநிலை, நடைபெற்றுவரும் திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் மாற்றம் ஏற்படும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச்செல்வதால், இக்காலங்களில் அஷ்டம சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்பட்ட சங்கடங்கள், நெருக்கடிகள் உங்களை விட்டு விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தேவையான வருமானம்வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளும் உடலில் ஏற்பட்ட பாதிப்பும் விலகும்.

ராகு - கேது சஞ்சாரம்
நவ.13, 2026 வரை ராகு சப்தம ஸ்தானத்திலும் கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் நீங்கள் நம்பியவர்களே உங்களை சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். குடும்பத்திலும் உங்கள் மனதிலும் நிம்மதி இல்லாமல் போகும். வாழ்க்கைத்துணையுடன் இடைவெளி அதிகரிக்கும். நவ. 13, 2026 முதல் ராகு சத்ரு ஜெய ஸ்தானத்திலும், கேது விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் சூறாவளியில் சிக்கி அவதிப்பட்டு வந்தநிலை மாறும். நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். வம்பு வழக்குகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். அஷ்டம சனியால் உண்டாகும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, மிதுனம் மற்றும் உங்கள் ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வருமானம் உயரும். குடும்பத்தில் இருந்த போராட்டநிலை மாறும். புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு துணை அமையும். குழந்தை பாக்யம் உண்டாகும். உயர் கல்வி, வேலை என்ற கனவு நனவாகும். கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஆடம்பர செலவு கூடும். கையிருப்பு கரையும். சிலர் இடம் வீடு வாகனம் வாங்குவீர்கள். கன்னியில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். வழக்கு சாதகமாகும். புதிய தொழில் அமையும். எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும்.

பொதுப்பலன்
அஷ்டம சனியால் அமைதி பறிபோகும். அல்லல்கள் உண்டாகும் என்றாலும், மார்ச் 17 முதல் லாப குருவும், நவ. 13, 2026 முதல் ராகுவும், கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானைப் பார்க்கும் குருவாலும் உங்கள் நிலை உயரும். உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். வீடு, வாகனம் வாங்குவீர். வேலை, தொழில், திருமணம், குழந்தை என்ற கனவுகள் நனவாகும். பொன் பொருள் சேரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.

தொழில் 
தொழில்காரகனான சனி பகவான் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். குரு சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் உயரும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கால்நடை, இயந்திரத் தொழில், மருத்துவம், மெடிக்கல்ஸ், கெமிக்கல், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சினிமா, சின்னத்திரை, ஜுவல்லரி, ஆடை ஆபரணத் தொழில்கள் லாபம் தரும் என்றாலும் முதலீட்டில் எச்சரிக்கை அவசியம்.

பணியாளர்கள் 
பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். செய்யாத தவறுக்கு பொறுப்பாக வேண்டிய நிலையும் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்கள் பார்த்துவரும் வேலையில் கவனமாக இருப்பதும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச்செல்வதும் நன்மையளிக்கும்.

பெண்கள்
உங்கள் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அஷ்டம சனி உடல்நிலையில் பாதிப்பையும் அல்லது அவமானத்தையும் ஏற்படுத்திடக்கூடியவர் என்பதால் குடும்பத்திற்கும் கணவருக்கும் தெரியாமல் இக்காலத்தில் எந்தவித முயற்சிகளும், முதலீடுகளும் மேற்கொள்ள வேண்டாம். குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும்.

கல்வி 
குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் படிப்பில் கவனம் செல்லும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை
அஷ்டம சனியின் காலம் என்பதால் உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு உண்டாகும். பரம்பரை நோய்களாலும், பருவ நோய்களாலும் சங்கடத்திற்கு ஆளாவதுடன் சிலர் விபத்தையும் சந்திக்க நேரும் என்பதால் உடல்நிலையில் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சங்கடம் என்ற நிலை ஏற்பட்டதும் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

குடும்பம் 
குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்தும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்று வாங்குவதுடன், சிலர் புதிய வீட்டிலும் பால் காய்ச்சுவீர்கள். 

பரிகாரம் :பைரவரை வழிபட்டுவர பயம் போகும். சங்கடங்கள் விலகும்.

பூரம்: உடல்நலனில் கவனம் தேவை

அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், ஆத்மக்காரகன் சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் ஆட்சியாக சஞ்சரித்து செயல்களில் தடை, எடுத்த வேலைகளை முடிக்க முடியாத நிலை, மனதில் குழப்பம், உடல்நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் நெருக்கடி என்று வாழ்க்கையைப் போராட்ட மயமாக்கிவந்த சனி பகவான், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான மீன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடிகளே இதுவரை நீங்காத நிலையில், அஷ்டம சனி என்ன செய்யப்போகிறார் என்ற பயமும் கேள்வியும் உங்களிடம் இருக்கும். பொதுவாக அஷ்டம சனியின் காலம் என்பது கடும் நெருக்கடிகளை சந்திக்கும் காலம் என்று பழம் பாடல்கள் கூறுகின்றன. இக்காலத்தில்
உழைப்பு அதிகரிக்கும். உங்கள் அவசரத்திற்கு நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் போகும் என்றாலும், முயற்சிக்கும் முதலீட்டிற்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். உங்களிடமும் நிதானம் உண்டாகும். உடல்நிலையில் அக்கறை ஏற்படும். பிறருடைய விமர்சனத்திற்கு அஞ்சி செயல்படுவீர்கள். மனதில் ஏதேனும் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்தநிலை. நடைபெற்றுவரும் திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் மாற்றம் ஏற்படும். 

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால், இக்காலங்களில் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மறைந்த உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் வெளிப்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.  அஷ்டம சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்பட்ட சங்கடங்கள், நெருக்கடிகள் இக்காலத்தில் உங்களை விட்டு விலகும்.

ராகு - கேது சஞ்சாரம்
நவ.13, 2026 வரை ராகு, கேது சஞ்சாரம் உங்களுக்கு சங்கடங்களை உண்டாக்கினாலும், நவ. 13, 2026 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். அஷ்டம சனியால் ஏற்படும் பாதிப்புகள் உங்களை நெருங்காத நிலையை உண்டாக்குவார். உடல்நிலையில் ஆரோக்கியம் உண்டாகும். வம்பு வழக்கு என்ற நிலையெல்லாம் மாறும். எதிர்ப்புகள் விலகும். நினைத்ததை நடத்தி முடிக்கும் நிலை ஏற்படும். உங்கள் அந்தஸ்து உயரும். ஜென்ம ராசியை விட்டு கேது விலகுவதால் மனம் தெளிவடையும். எந்த ஒன்றையும் திட்டமிட்டு செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக அஷ்டம சனிக்காலத்தில் அவரால் உண்டாகும் சங்கடங்களில் இருந்து குரு பகவான் உங்களைப்பாதுகாப்பார். குருப்பார்க்க கோடிப்புண்ணியம் என்ற வார்த்தைகளை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணரப்போகிறீர்கள். 
மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் சஞ்சாரம் மற்றும் பார்வைகளாலும், கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் தன் பார்வைகளாலும் செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, படிப்பு, வேலை, திருமணம், சொத்து, சுகம், குழந்தை, வருமானம் என்று உங்கள் கனவை நனவாக்குவார். நோய் நொடியை நீக்கி வைப்பார்.

பொதுப்பலன்
அஷ்டம சனிக்காலத்திலும் குருவின் சஞ்சாரங்களும், பார்வைகளும், நவ. 13, 2026 முதல் ராகுவும், 3,6,11 ல் செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்களிலும், 3,6,10,11 ல் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களிலும், குரு பகவான் கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் அவருடைய பார்வை சனி பகவானுக்கு கிடைப்பதாலும் அஷ்டம சனி என்ற பயமே உங்களுக்கு இல்லாமல் போகும். உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். வீடு, வாகனம் சேரும். வேலை, தொழில், திருமணம், குழந்தை என்ற கனவுகள் நனவாகும் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.

தொழில் 
செய்துவரும் தொழிலில் அக்கறையுடன் செயல்படவேண்டிய காலமிது. தொழில் காரகன் சனி அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும். ஜுவல்லரி, பேன்சி ஸ்டோர், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை. ஜவுளி, கவரிங், வாகன விற்பனை, உதிரிபாகங்கள் விற்பனை. பியூட்டி பார்லர். சின்னத்திரை. சினிமா. யூ ட்யூப் தொழில்கள் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள் 
காலம் நேரம் அறிந்து செயல்படுவதில் வல்லவரான நீங்கள் அஷ்டம சனியின் பார்வை தொழில் ஸ்தானத்திற்கும், தன குடும்ப ஸ்தானத்திற்கும் உண்டாவதை உணர்ந்து நிதானமாகவும் நேர்மையாகவும் செயல்படுவது நன்மையாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். சிலர், பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். அரசு பணியில் இருப்பவர்கள் உடன் பணிபுரிவோரையும் மேல் அதிகாரியையும் அனுசரித்துச் செல்வது அவசியம்.

பெண்கள்
அஷ்டம சனியின் காலம் என்பது உங்களுக்கு நெருக்கடியான காலமாகும். மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் கணவர் நலனில் கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம். உங்கள் உடல்நிலை மற்றும் மனநிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றுவதற்கு வாய்ப்பிருந்தாலும் மங்களக்காரகனான குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல், உங்களுக்குவரும் சங்கடங்கள் எல்லாம் உங்களை நெருங்காமல் போகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். குடும்பத்திற்குள் நிம்மதி இருக்கும் என்றாலும் வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல், ஆலோசிக்காமல் எந்தவொரு முயற்சியிலும் இக்காலத்தில் இறங்க வேண்டாம்.

கல்வி 
ஐந்தாம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் உயர்க்கல்வி கனவோடு இருப்பவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும், படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவதும் அவசியம். தேர்வு காலங்களில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

உடல்நிலை உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். சிலர் திடீரென மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகும். இயந்திரப் பணியில் இருப்பவர்களும், வாகனம் ஓட்டுபவர்களும் முடிந்தவரை எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். இக்காலத்தில் மறைமுக நோய்கள், பரம்பரை நோய்கள் என்றும் பயமுறுத்த வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

குடும்பம் 
குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். புதிய சொத்து வாகனம் ஆடை ஆபரணம் என்று சேரும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

பரிகாரம் :குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வர பகவானை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.

உத்திரம்:எச்சரிக்கை அவசியம்

ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசி நாதனாகவும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி சூரியனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடங்களுக்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவராகிறார். உத்திரம் 1ம் பாதத்தினருக்கு சனி அஷ்டம ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியாகவும் சஞ்சரிக்க உள்ளார். இதனால் 1ம் பாதத்தினருக்கு அஷ்டம சனியாக குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடிகளையும், உடல்நிலையிலும் செல்வாக்கிலும் பின்னடைவையும் ஏற்படுத்துவார். மனதில் குழப்பத்தையும் வேதனையையும் உண்டாக்குவார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 7ம் இடத்தில் சஞ்சரித்து தவறான நட்புகளால் சங்கடத்தை உண்டாக்குவார். கணவன் மனைவிக்குள் பிரச்சனையை அதிகரிப்பார். நட்பு வட்டத்தில் விரிசலை ஏற்படுத்துவார். உடல்நிலையில் பாதிப்பை உருவாக்குவார். மனதில் குழப்பத்தை அதிகரிப்பார் என்றாலும், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்தநிலை. திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் மாற்றம் ஏற்படும். 

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வரவும் சேமிப்பும் அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். பொறுப்பும் பதவியும் தேடிவரும்.

ராகு - கேது சஞ்சாரம்
உத்திரம் 1ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 முதல் ஆறாமிட ராகுவால் அல்லல்கள் அகலும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13, 2026 வரை சத்ரு ஜெய ஸ்தான ராகுவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். எதிர்ப்பு, பகை, வழக்கு என்பதெல்லாம் உங்களைக்கண்டு பயந்தோடும்.
உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருத்துவச்செலவு குறையும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டமும் வெற்றியும் தேடிவரும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1ம் பாதத்தினருக்கு
மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில், சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உயர்கல்வி கனவு நனவாகும். குழந்தை பாக்யம் உண்டாகும். கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் அஷ்டம சனியின் பாதிப்பு விலகும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானின் பாதிப்பு விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் உத்தியோகம், தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வீடு, வாகனம் என்று வாங்குவதாலும் ஆடம்பர செலவுகளாலும் கையிருப்பு கரையும்.

பொதுப்பலன்
யோகக்காரகன் ராகுவும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும், செவ்வாய், சூரியன் சஞ்சாரங்களும், கடகம், கன்னியில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானுக்கு குருப்பார்வை கிடைப்பதாலும் அஷ்டம சனி, கண்டக சனி என்ற பயம் உங்களை விட்டு விலகும். எடுத்த வேலைகள் தடையின்றி நடந்தேறும். தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீண் செலவுகள் கட்டுப்படும். உடல்நிலை சீராகும். புதிய சொத்து சேரும். உயர் கல்வி, திருமணம், வேலை என்ற கனவுகள் நனவாகும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

தொழில் 
பிறருக்கு வெளிச்சமாக வாழ்ந்துவரும் உங்களுக்கு தொழிலில் நெருக்கடி, கூட்டுத்தொழிலில் பிரச்சனைகள் என்று ஏற்பட்டாலும் அனைத்தையும் சமாளித்து முன்னேற்றமடைவீர்கள். அரசு ஒப்பந்தம், ஷேர் மார்க்கெட், எக்ஸ்போர்ட், ட்ராவல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், வாகன விற்பனை, சின்னத்திரை, சினிமா, யூடியூப் தொழில்கள் வளர்ச்சி அடையும். ஒப்பந்ததாரர் களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

பணியாளர்கள் 
உழைப்பால் உயர்வடைந்துவரும் உங்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள், சங்கடங்கள் யாவும் விலகும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். பதவி உயர்வு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்
திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல் நிலை சீராகும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட உறவினர்கள் உங்களிடமே உதவி கேட்டு வருவர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இக்காலத்தில் புதிய நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையாகும். குடும்பத்தினருக்கு தெரியாமல் வெளியூர் பயணம் செல்வது, பிறரை நம்பி செயல்படுவது,  முதலீடுகள் செய்வது உங்களை சங்கடத்திற்கு ஆளாக்கும் என்பதால் உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வது நன்மையாகும்.

கல்வி 
படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதால் பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், பொறியியல், சட்டம் படிக்கும் கனவு நனவாகும். ஒரு சிலர் வெளிமாநிலங்கள், வெளிநாட்டிற்கு உயர் கல்விக்காக செல்வீர்கள்.

உடல்நிலை 
தொற்றுநோய், பரம்பரைநோய், விபத்து என்று மருத்துவமனைகளுக்குச் சென்று வந்தவர்கள் நிலைமாறும். நோயின் தன்மையைக் கண்டறிந்து சிகிச்சை பெற்று  குணமடைவீர்.

குடும்பம் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் பிரச்சனைகள் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கடன் வாங்கியாவது வீடு மனை என்று வாங்குவீர்கள். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதுடன் விட்டுக்கொடுத்தும் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் மேற்கல்வி, திருமணம் என்பதில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

பரிகாரம் :லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் சனிப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us