sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ பங்காளி தகராறு!

பங்காளி தகராறு!

பங்காளி தகராறு!


PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இதையெல்லாம் பார்த்து அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை...' என விரக்தியுடன் கூறுகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன். லோக்சபா தேர்தல் முடிந்த நிம்மதி அவரிடம் இருந்தாலும், அவரது முகத்தில் ஒரு இனம் புரியாத சோகம் படிந்துள்ளது.

இது பற்றி கேட்டால், மனதுக்குள் அடக்கி வைத்திருந்ததை கொட்டி தீர்க்கிறார். கடந்த ஒரு ஆண்டாகவே பினராயி விஜயனுக்கும், 'மைக்'கிற்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.

முன்னாள் முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, மறைந்த உம்மன் சாண்டியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் விஜயன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும்போது, மைக் தகராறு செய்தது. அது மட்டுமல்லாமல், நாய் ஊளையிடுவது போன்ற சத்தம், மைக்கில் இருந்து வந்தது. அதிர்ச்சி அடைந்த விஜயன், பாதியிலேயே பேச்சை முடித்து விட்டார்.

அந்த மைக் செட் ஆப்பரேட்டர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தது தனிக் கதை. கடந்த மாதம் கோட்டயத்தில் நடந்த கூட்டத்தில் பேசியபோதும், மைக் கோளாறு ஏற்பட்டு, விஜயன் பேசியது சரியாக கேட்காமல் போனது. இதனால், அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றார்.

அடுத்த சில நாளில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசாரம் செய்தபோதும், மைக் வேலை செய்யவில்லை. வேறு ஒரு மைக் ஏற்பாடு செய்தபோதும், அதுவும் தகராறு செய்தது.

இதனால் வெறுத்துப் போன விஜயன், 'மைக்கிற்கும், எனக்கும் அப்படி என்ன பங்காளி தகராறு என்று தெரியவில்லை...' என, புலம்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us