PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM

சமீபத்தில் பார்லி.,யில் தொகுதி மறுவரையறை பற்றிய விவாதம் நடந்தது. அப்போது கர்நாடக பா.ஜ., – எம்.பி.,யான தேஜஸ்வி சூர்யா, சற்றே உணர்ச்சி வசப்பட்டு, ‘தெலுங்கானாவை அனைத்து வசதிகளையும் கொண்ட, ‘ைஹபிரிட் மாடல்’ மாநிலமாக அதன் முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறுகிறார்.
‘இவர் காங்கிரசைச் சேர்ந்தவர். காங்கிரஸ் முன்பு, இந்தியா – பாகிஸ்தானை பிரித்ததை விட, ஆந்திராவைப் பிரித்து விட்டது காங்கிரஸ்’ என பேசினார்.
இதைக் கேட்டதும், தெலுங்கானா காங்., – எம்.பி.,க்கள், தெலுங்கானாவைப் பிரிக்க பாடுபட்டு வெற்றி கண்ட, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி எம்.பி.,க் கள் கொந்தளித்து விட்டனர்.
பா.ஜ., கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள், ‘ஏன் சூர்யா ஏதேதோ உளறுகிறார்...’ என்று எண்ணி, தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவர் காதில் ஓதி விட்டனர். அவரும், ‘தெலுங்கானாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அவர் பேசவில்லை. தவறாகப் புரிந்து கொண்டு விட்டனர்’ என, சப்பைக்கட்டு விளக்கம் ஒன்றைக் கொடுத்து விட்டார்.
எனவே, தேஜஸ்வி இன்னும் கொஞ்ச நாள், வாயை மூடிக் கொண்டிருப்பார் என எதிர்பார்க்கலாம்!
