PUBLISHED ON : ஆக 29, 2024 12:00 AM

'வேறு வழியில்லை; அவர் வந்தால் தான் சரியாக இருக்கும்...' என, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானி குறித்து பேசுகின்றனர், அந்த கட்சியின் மூத்தநிர்வாகிகள்.
ஸ்மிருதி இரானி, மோடி தலைமையிலான முதல் இரண்டு அரசுகளிலும் அமைச்சராக பதவி வகித்தவர். மனித வளம், தகவல் மற்றும் ஒலிபரப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்த அனுபவம் உள்ளவர்.
கடந்த ஆட்சியில், லோக்சபாவில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் ஆவேசமாகபதிலடி கொடுத்து அசத்தியவர். இவரது ஆவேசமான பேச்சை கேட்டு, எதிர்க்கட்சியின் மூத்த தலைவர்கள் மிரண்ட நிகழ்வுகளும் உண்டு.
ஆனால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் அமேதியில் தோல்வி அடைந்ததால், ஸ்மிருதியால் அமைச்சராக முடியவில்லை. சமீப காலமாக ராஜ்யசபாவில் ஆளுங்கட்சியில் ஆவேசமாகவும், எதிர்க்கட்சியினரை திணறடிக்கும் வகையிலும் பேசக் கூடிய தலைவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால், மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், சமாஜ்வாதியின் ஜெயா பச்சன் மற்றும்திரிணமுல் காங்., - எம்.பி.,க்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஆளும் தரப்புதிணறுகிறது.
இதையடுத்து, 'இவர்களுக்கு கடிவாளம் போட, ஸ்மிருதி இரானி மட்டுமே சரியான ஆள். அவரை உடனடியாக ராஜ்யசபா எம்.பி.,யாக்கி உள்ளே அனுப்ப வேண்டும்...' என, பா.ஜ.,வில் பேச்சு அடிபடுகிறது.

