sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/வித்தியாசமான அரசியல்வாதி!

வித்தியாசமான அரசியல்வாதி!

வித்தியாசமான அரசியல்வாதி!


PUBLISHED ON : பிப் 07, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 07, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பரவாயில்லையே; பதவிக்காக கோஷ்டி மோதலில் ஈடுபடாமல் ஆரோக்கியமான அரசியல் செய்கிறாரே...' என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ரேணுகா சிங்கை பாராட்டுகின்றனர், சக அரசியல்வாதிகள்.

இவர், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.இங்கு முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

ரேணுகா சிங், கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, பிரதமர் மோடி தலைமையிலான அரசில், மத்திய பழங்குடியினர் நல விவகார இணை அமைச்சராக பதவி வகித்தார்.

சத்தீஸ்கருக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, தேர்தலில் போட்டியிடும்படி கட்சி மேலிடம், அவருக்கு உத்தரவிட்டது.

இதனால், பா.ஜ., வெற்றி பெற்றால் ரேணுகாவுக்கு முதல்வர் பதவி தரப்படும் என பேசப்பட்டது. அப்படி எதுவும் நடக்கவில்லை. ரேணுகாவுக்கு அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லை.

இதனால் அவர், உள்ளடி அரசியலில் ஈடுபடலாம் என பேச்சு எழுந்தது. ஆனால் அவரோ, தன் தொகுதியில், பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பழங்குடியின மாணவியரை அழைத்து கவுரவித்து வருகிறார்.

ஒரு நாள் எம்.எல்.ஏ., பதவியை அவர்களுக்கு அளித்து, முக்கியமான நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அவர்களை பங்கேற்க வைத்து அசத்துகிறார்.

'பதவிக்காக சண்டை போடும் அரசியல்வாதிகள் இருக்கும் இந்த காலத்தில் ரேணுகா சிங் வித்தியாசமானவராக திகழ்கிறார்...' என பாராட்டுகின்றனர், சத்தீஸ்கர் மக்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us