தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘இனியாவது மரியாதை கிடைக்குமா?’

‘இனியாவது மரியாதை கிடைக்குமா?’

‘இனியாவது மரியாதை கிடைக்குமா?’


PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார், ஏமாற்றி காரியம் சாதிப்பவர்கள் யார் என தெரியாமல், கட்சி தலைமை செயல்பட்டால் இப்படித் தான் நடக்கும்...’ என குமுறுகின்றனர், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து, ஆட்சியை பறிகொடுத்தது. தொடர்ச்சியாக, 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த மம்தா பானர்ஜி, இப்போது முடங்கிப் போயுள்ளார்.

இங்கு, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, திரிணமுல் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்ததால், தேர்தலில், ‘சீட்’ கேட்டு, கட்சி நிர்வாகிகள் பலர் கடுமையான முயற்சிகளை மேற் கொண்டனர்.

ஆனால், பெங்காலி திரைப்பட நடிகையான மிமி சக்ரவர்த்திக்கு சீட் கொடுத்தார், மம்தா. ஐந்து ஆண்டுகள் எம்.பி., பதவியை அனுபவித்த மிமி, தற்போது கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஒதுங்கி விட்டார்.

மிமிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அவரது திருமண பத்திரிகைகளில், மணமகள், மணமகன் புகைப்படங்களும், அவர் செல்லமாக வளர்க்கும் நான்கு நாய்க்குட்டிகளின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. மிமியை எம்.பி.,யாக்கி அழகு பார்த்த மம்தாவின் புகைப்படமோ, பெயரோ இடம்பெறவில்லை.

இதை கேள்விப்பட்ட திரிணமுல் காங்., நிர்வாகிகள், ‘இனியாவது கட்சிக்காரர்களை மம்தா மதித்தால் சரி தான்...’ என புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us