தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘குடும்ப அரசியலை துாற்றுவதா?’

‘குடும்ப அரசியலை துாற்றுவதா?’

‘குடும்ப அரசியலை துாற்றுவதா?’


PUBLISHED ON : நவ 27, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘இது, புது குற்றச்சாட்டாக உள்ளதே...’ என, ஆந்திர மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து வியக்கின்றனர், அந்த மாநில மக்கள்.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் – பா.ஜ., – ஜனசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியாக, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் உள்ளது.

இந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர், விஜய்சாய் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர், ராஜ்யசபா எம்.பி., மற்றும் பார்லிமென்ட் குழுத் தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

சில மாதங்களுக்கு முன், திடீரென ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்த இவர், தீவிர அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார். சமீபத்தில் மீண்டும் அரசியலுக்கு வந்த இவர், பரிவர்த்தனா ராஜ் நீதி என்ற கட்சியை துவக்கினார்.

இது குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கிய அவர், ‘ஆந்திராவில் இரண்டு குடும்பங்களில் இருந்து தான், தொடர்ந்து முதல்வர்கள் வருகின்றனர். ஒன்று, முன்னாள் முதல்வர், மறைந்த என்.டி.ராம ராவ் குடும்பத்தினர்; மற்றொன்று, முன்னாள் முதல்வர், மறைந்த ராஜசேகர ரெட்டி குடும்பத்தினர். சாதாரண மக்களும் ஆந்திர முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், புது கட்சியை துவக்கியுள்ளேன்...’ என்றார்.

ஜெகன் மோகன் ரெட்டியோ, ‘புதிதாக கட்சி துவங்கிவிட்டு குடும்ப அரசியலை துாற்றுவதா...?’ என புலம்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us