தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘இதென்ன புது தலைவலி?’

‘இதென்ன புது தலைவலி?’

‘இதென்ன புது தலைவலி?’


PUBLISHED ON : நவ 18, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘மீதமுள்ள பதவிக் காலத்தை சுமுகமாக முடிப்பது சிரமமாக இருக்கும் போலிருக்கிறதே...’ என கவலைப்படுகிறார், கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவகுமார்.

எப்படியாவது கர்நாடக முதல்வர் பதவியில் அமர்ந்து விட வேண்டும் என, 10 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வந்த சிவகுமாரின் ஆசை, கடந்த ஜூனில் தான் நிறைவேறியது.

கட்சியில் உள்ள மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆதரவாளர்களின் குடைச்சல் ஆகியவற்றை கடந்து ஆட்சியை நடத்துவது, சிவகுமாருக்கு பெரிய தலைவலியாகவே உள்ளது.

இந்த பிரச்னை போதாது என்று, சமீபத்தில் சில கன்னட அமைப்புகளும், அவரது கவலையை அதிகரித்துள்ளன. கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், கன்னடர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாக, ‘கர்நாடக ரக் ஷன வேதிகே’ என்ற அமைப்பு சமீபத்தில் குற்றஞ்சாட்டியது.

இதற்கு, சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘இதுபோன்ற அமைப்புகளை கர்நாடகாவில் வளரவிட்டால், பெரிய நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு ஓடி விடும்...’ என்றும், அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இதனால் கடுப்பான கன்னட அமைப்புகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முன் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

முதல்வர் சிவகுமாரோ, ‘இருக்கும் பிரச்னைகள் போதாது என்று, இதென்ன புது தலைவலி...’ என புலம்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us