தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ வாய்க்கு வந்ததை உளறலாமா?

 வாய்க்கு வந்ததை உளறலாமா?

 வாய்க்கு வந்ததை உளறலாமா?


PUBLISHED ON : ஏப் 25, 2026 01:21 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2026 01:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர், பொது வெளியில் இப்படி பேசலாமா...?' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதை பார்த்து கொந்தளிக்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, 83 வயதாகிறது. மத்திய அமைச்சர், எம்.பி., உட்பட பல முக்கியமான பொறுப்புகளை வகித்தவர்; தற்போது ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

கார்கே, அதிகம் உணர்ச்சிவசப்படவோ, கோபப்படவோ மாட்டார். எந்த விஷயத்திலும் யோசித்து, நிதானமாகவே கருத்து தெரிவிப்பார். ஆனால், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, பிரதமர் மோடியை, 'பயங்கரவாதி' என குறிப்பிட்டார்.

இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பவே, 'மோடியை தனிப்பட்ட முறையில் நான் கூறவில்லை. எதிர்க்கட்சியினர் விஷயத்தில் சர்வாதிகாரமாக செயல்படுவதால், அப்படி குறிப்பிட்டேன்' என, சமாளித்தார்.

ஆனால், இந்த விஷயத்தை பா.ஜ.,வினர் விடுவதாக இல்லை. 'கார்கே, ஒரு மூத்த அரசியல்வாதி என்பதால், அவர் மீது நாங்களும் மரியாதை வைத்துள்ளோம். அதேநேரத்தில், ஒரு நாட்டின் தலைவரை, இப்படி தரக்குறைவாக கூறிய அவரை சும்மா விட மாட்டோம்...' என, குமுறுகின்றனர், பா.ஜ.,வினர்.

காங்கிரஸ் கட்சியினரோ, 'மேற்கு வங்கம், தமிழகம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடந்த நேரத்தில் கார்கே, இப்படி வாய்க்கு வந்தபடி உளறலாமா...?' என, புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us