sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ சினிமா கை கொடுக்கும்!

 சினிமா கை கொடுக்கும்!

 சினிமா கை கொடுக்கும்!


PUBLISHED ON : டிச 18, 2025 03:32 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2025 03:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பழைய நினைவுகளை மறக்காமல் ஞாபகம் வைத்துள்ளாரே...' என, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலை வருமான சிராக் பாஸ்வான் பற்றி கூறுகின்றனர், பீஹார் அரசியல்வாதிகள்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில், லோக் ஜனசக்தி கட்சியும் இடம் பெற்றுள்ளது.

கடந்த நவம்பரில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், 28 தொகுதிகளில் போட்டியிட்டு, 19 இடங்களில் லோக் ஜனசக்தி கட்சி வெற்றி பெற்றது. இதனால், மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் சிராக் பாஸ்வான்.

பீஹார் தலைநகர் பாட்னாவில் சமீபத்தில் நடந்த, தன் உறவினர் வீட்டு திருமணத்தில் சிராக் பங்கேற்றார். அங்கிருந்தவர்கள், நடனமாடும்படி சிராக்கை வற்புறுத்தினர்.

சற்றும் தயங்காமல் மேடையேறிய சிராக், சில ஆண்டுகளுக்கு முன், தான் நடித்த ஹிந்தி திரைப் படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு நடனமாடி, அனைவரையும் மகிழ்வித்தார்.

அரசியலுக்கு வரும் முன், சில ஹிந்தி திரைப் படங்களில் நடித்தார் சிராக். ஆனால், தன் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் இறந்ததால், அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது.

திருமண விழாவில், சிராக்கின் நடனத்தை பார்த்த அரசியல்வாதிகள் சிலர், 'அரசியல் கை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை... சினிமாவில் நடித்து சிராக் பிழைத்து கொள்வார்...' என கிண்டல் அடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us