sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/வாய்க்கு எட்டாதோ?

வாய்க்கு எட்டாதோ?

வாய்க்கு எட்டாதோ?


PUBLISHED ON : செப் 16, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என நினைத்தால், கடைசி நேரத்தில் இப்படி சிக்கல் வருகிறதே...' என கவலைப்படுகின்றனர், ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியினர்.

இங்கு, முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த 10 ஆண்டு களாக பா.ஜ.,தான் இங்கு ஆட்சியில் உள்ளது. அடுத்த மாத துவக்கத்தில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. விவசாயிகள் போராட்டம் காரணமாக பா.ஜ.,வின் செல்வாக்கில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆட்சியை பிடிப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். மல்யுத்த வீரர்களை வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளது, காங்கிரஸ். இதனால், 'வெற்றி கைக்கு எட்டும் துாரம் தான்...' என, காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் வடிவத்தில், காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

டில்லியை ஒட்டியுள்ள ஹரியானாவில், ஆம் ஆத்மிக்கும் கணிசமான செல்வாக்கு உள்ளது.

'கெஜ்ரிவால் சிறையில் இருந்தால், அவர் பிரசாரத்துக்கு வரமாட்டார். ஓட்டுகள் பிரியாது. எளிதில் வெற்றி பெற்று விடலாம்' என, காங்., கட்சியினர் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்து விட்டது. ஹரியானா தேர்தலுக்கு பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார். இதனால், இங்குள்ள காங்., தலைவர்கள், 'கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாது போலிருக்கிறதே...' என, புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us