sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ ஓயாத குடும்ப சண்டை!

ஓயாத குடும்ப சண்டை!

ஓயாத குடும்ப சண்டை!


PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இவரது அரசியல் அக்கப் போருக்கு முடிவே இல்லையா...?' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனும், அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான தேஜ் பிரதாப் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், அந்த கட்சி நிர்வாகிகள்.

பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு வயதாகி விட்டதால், தன் இளைய மகன் தேஜஸ்வி யாதவிடம், கட்சியை வழிநடத்தும் பொறுப்பை கொடுத்துள்ளார்.

மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப்பும் கட்சியில் முக்கிய பொறுப்பில் தான் இருந்தார்; ஆனால், அவரது நடத்தை மோசமாக இருந்ததால், அதிரடியாக அவரை கட்சியை விட்டு நீக்கினார், லாலு.

ஆனாலும், தேஜ் பிரதாப் தொடர்ந்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான, சமாஜ்வாதி கட்சி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவின் குடும்பத்தில் தான், தேஜ் பிரதாபின் சகோதரியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

கட்சியிலிருந்து, தான் நீக்கப்பட்டது குறித்து, அகிலேஷ் யாதவிடம் முறையிடுவதற்காக, தொடர்ச்சியாக அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு நச்சரித்துள்ளார், தேஜ் பிரதாப். இதனால் எரிச்சலடைந்த அகிலேஷ், தேஜ் பிரதாபின் மொபைல் போன் எண்ணை, 'பிளாக்' செய்து விட்டார்.

கடுப்பான தேஜ் பிரதாப், அகிலேஷை தொடர்ந்து வசைபாடி வருகிறார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினரோ, 'குடும்ப சண்டை, அரசியல் சண்டையாக மாறி விட்டதே...' என, புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us