sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ பொய்த்து போன எதிர்பார்ப்பு!

 பொய்த்து போன எதிர்பார்ப்பு!

 பொய்த்து போன எதிர்பார்ப்பு!


PUBLISHED ON : மே 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே...' என கவலைப்படுகிறார், கேரள மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான, சாண்டி உம்மன்.

கேரளாவில், முதல்வர் சதீசன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, மறைந்த உம்மன் சாண்டியின் மகன் தான், சாண்டி உம்மன்.

கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் இருந்து, 10க்கும் மேற்பட்ட முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட பெருமை, உம்மன் சாண்டிக்கு உண்டு. அங்கு, அவருக்கு தனி செல்வாக்கு இருந்தது.

உம்மன் சாண்டியின் மறைவுக்குப் பின், அவரது மகன் சாண்டி உம்மனுக்கு, புதுப்பள்ளியில் போட்டியிட வாய்ப்பளித்தது, காங்கிரஸ் மேலிடம். 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சாண்டி உம்மன், சமீபத்தில் நடந்த தேர்தலிலும் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னாள் முதல்வரின் மகன் என்பதால், இந்த முறை, அவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு ஏற்ப, அவரது ஆதரவாளர்களும், 'வருங்கால அமைச்சர் சாண்டி உம்மன்...' என சமூக வலை தளங்களில் பதிவிட்டு, 'ஜால்ரா' அடித்தனர்.

ஆனால், அமைச்சரவையில் சாண்டி உம்மனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், நொந்து போயிருக்கும் சாண்டி உம்மன், 'அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்தது நம்ம தப்புதான்...' என புலம்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us