sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ பிரமாண்ட விருந்தோம்பல்!

பிரமாண்ட விருந்தோம்பல்!

பிரமாண்ட விருந்தோம்பல்!


PUBLISHED ON : ஜன 14, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 14, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அடிப்படையில் அதிகாரியாக இருந்தாலும், அரசியல்வாதிகளுக்கு உரிய எல்லா அம்சங்களையும் கற்று தேர்ந்து விட்டார்...' என, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஸ்வினி வைஷ்ணவ் குறித்து பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள்.

அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர்; அங்கு, பல மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றி பாராட்டு பெற்றவர்.

இவரை அரசியலுக்கு இழுத்து வந்தவர், பிரதமர் மோடி. தற்போது இவர், மத்திய அரசில் தவிர்க்க முடியாத அமைச்சர். ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் அமைச்சராக உள்ளார்.

சமீபகாலமாக, வாரந்தோறும் மத்திய அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து, பத்திரிகையாளர்களுக்கு விளக்கும் பணியும் இவருக்கு தரப்பட்டுள்ளது.

இங்கு, வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பை போல் இல்லாமல், டிஜிட்டல் திரையில் அமைச்சரவையின் முடிவுகள் குறித்த தகவல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதை ஒவ்வொரு அம்சமாக பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் போல் பத்திரிகையாளர்களுக்கு விளக்குகிறார், வைஷ்ணவ்.

இந்த சந்திப்பு முடிந்ததும், அறுசுவை விருந்தும் உண்டு. ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான உணவு வகைகள் பத்திரிகையாளர்களுக்கு சுடச் சுடவும், சுவையாகவும் பரிமாறப்படுகின்றன.

இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'பத்திரிகையாளர்களுக்கு அமைச்சரவை முடிவுகளை விளக்குவது மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்டைலில் இருந்தால் போதுமா... விருந்தோம்பலும் அதுபோல் பிரமாண்டமாக இருக்க வேண்டாமா...?' என, சிரித்தபடியே கூறுகிறார் அஸ்வினி வைஷ்ணவ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us