தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ 'தேவையா இந்த அவமானம்?'

 'தேவையா இந்த அவமானம்?'

 'தேவையா இந்த அவமானம்?'


PUBLISHED ON : செப் 21, 2026 01:30 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 21, 2026 01:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஒரு விஷயத்தை பற்றி பேசும்போது, அது பற்றிய கடந்த கால வரலாறுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டாமா...?' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பற்றி கூறுகின்றனர், பா.ஜ.,வினர்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இதையடுத்து, அந்த கட்சியில் இருந்து பெரும்பாலான நிர்வாகிகள் வெளியேறினர். இதனால், கட்சி இரண்டாக பிளவுபட்டது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மம்தா மீள்வதற்குள், திரிணமுல் காங்கிரஸ் பெயரையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் முடக்கி வைத்து, அடுத்த இடியை இறக்கியது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல், 'ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல் கமிஷன், பா.ஜ.,வின் கைப் பாவையாகச் செயல்படுகிறது...' என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த பா.ஜ.,வினர், 'மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, எத்தனை கட்சிகளை அழித்தது; எத்தனை மாநிலங்களில் அரசை கவிழ்த்தது என்பதை அறிய, ராகுல் முதலில் கடந்த கால வரலாறை படிக்க வேண்டும்...' என, காட்டமாக தெரிவித்தனர்.

காங்., கட்சியினரோ, 'நம் கட்சியே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதில் இருந்து கட்சியை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு, அடுத்த கட்சிக்கு வக்காலத்து வாங்கி, எதற்கு அவமானப்பட வேண்டும்...?' என, முணுமுணுக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us