தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/'இனி யோகம் தான்!'

'இனி யோகம் தான்!'

'இனி யோகம் தான்!'

1


PUBLISHED ON : செப் 22, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இப்படி என்றால், தேர்தல் அறிவித்த பின், பஞ்சாப் மாநில மக்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் போலிருக்கிறதே...' என, அண்டை மாநில மக்கள் பொறாமைப்படுகின்றனர்.

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, ஏற்கனவே டில்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருந்தது. டில்லியில் 2025ல் நடந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது.

தற்போது, பஞ்சாபில் மட்டுமே அந்த கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இருக்கும் ஒரு மாநிலத்தையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஆம் ஆத்மி அரசு இப்போதே சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில் 8 சதவீத அகவிலைப்படி உயர்வை, முதல்வர் பகவந்த் சிங் மான் அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிப்பதற்குள், 'பெண்களுக்கு மாதந்தோறும், 5,000 ரூபாய் உதவித்தொகை, மாதத்துக்கு ஒரு காஸ் சிலிண்டர் இலவசம்' போன்ற அறிவிப்புகளையும் வெளியிட, ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, 'பஞ்சாப் மக்களுக்கு இனி யோகம் தான்...' என்கின்றனர், பக்கத்து மாநில மக்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us