sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ எதிர்க்கட்சி புத்தி!

எதிர்க்கட்சி புத்தி!

எதிர்க்கட்சி புத்தி!


PUBLISHED ON : ஜூன் 03, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஒருவர், ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்யும்போது, அதை பாராட்ட வேண்டுமே தவிர, கிண்டலடிக்க கூடாது...' என, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவாரை விமர்சிப்பவர்களை பற்றி வருத்தத்துடன் கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித் பவாருக்கு, அதிகாரி கள் பூங்கொத்துகளை பரிசாக அளித்தனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அஜித் பவார், 'தயவுசெய்து எனக்கு பூங்கொத்துகளை யாரும் பரிசளிக்க வேண்டாம்; இதனால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. பூங்கொத்துகளுக்கு பதிலாக நல்ல புத்தகங்களை பரிசளியுங்கள்...' என்றார்.

இதைத் தொடர்ந்து தற்போது நடக்கும் நிகழ்வுகளில், அஜித் பவாருக்கு பலரும் புத்தகங்களைத் தான் பரிசாக அளிக்கின்றனர்; இதனால், அவரது வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் குவிந்து விட்டன.

இதை கிண்டலடித்த எதிர்க்கட்சியினர், 'அஜித் பவார், இன்னும் சில நாட்களில் இவற்றை எல்லாம், பழைய பேப்பர் கடையில் எடைக்கு போட்டு விடுவார்...' என்கின்றனர்.

'புத்தகங்களை எடைக்குத் தான் போட வேண்டும் என சட்டம் இருக்கிறதா... நுாலகங்களுக்கு கொடுக்க முடியாதா; எதிர்க்கட்சியினர் புத்தி ஏன் இப்படி போகிறது...' என, அஜித் பவார் ஆதரவாளர்கள் ஆவேசப்படுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us