தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘நமது வெற்றி உறுதி!’

‘நமது வெற்றி உறுதி!’

‘நமது வெற்றி உறுதி!’


PUBLISHED ON : நவ 15, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘சகுனம் நன்றாக இருக்கிறது; கண்டிப்பாக அடுத்த முறையும் நம் ஆட்சி தான்...’ என, நம்பிக்கையுடன் கூறுகின்றனர், உத்தர பிரதேச மாநில பா.ஜ.,வினர்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் வியூகத்தை வகுக்கத் தொடங்கியுள்ளன.

உ.பி.,யில் உள்ள மிர்சாபூரில் பிரசித்தி பெற்ற சுவாமி அட்காடனந்தின் ஆசிரமம் உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்கள், தொழில் அதிபர்கள் பலரும், சுவாமியிடம் ஆசி பெற்று செல்வது வழக்கம்.

சமீபத்தில் சுவாமி அட்காடனந்தின் சீடர் ஒருவர், உ.பி., தலைநகர் லக்னோவுக்கு வந்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து, ஆசிரமத்தின் பிரசாதத்தையும், இளம் சிவப்பு நிற சால்வையையும் பரிசளித்து விட்டு, ‘சுவாமிகள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு...’ என, ஆசிர்வதித்து விட்டு சென்றார்.

இதைக் கேள்விப்பட்டு பா.ஜ.,வினர் உற்சாகத்தில் உள்ளனர். ‘கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, சுவாமிகளின் சீடர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து, இதுபோல் ஆசிர்வதித்து விட்டு சென்றார். அந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, இந்த முறை நமக்குத் தான் வெற்றி...’ என, பா.ஜ.,வினர் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us