PUBLISHED ON : டிச 22, 2024 12:00 AM

'உண்மையை சொல்கிறாரா இல்லை சுவாரஸ்யமாகஇருக்கட்டும் என்பதற்காக அளந்து விடுகிறாரா என்று தெரியவில்லையே...' என, கர்நாடக முதல்வரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா பற்றி கூறுகின்றனர், அம்மாநில மக்கள்.
சித்தராமையா, மூத்த அரசியல்வாதி. பேச்சாற்ற லும், சாமர்த்தியமும்உள்ள அரசியல்வாதி என்பதால் தான், இப்போதும் அவரால் முதல்வர்பதவியில் நீடிக்க முடிகிறது.
சமீபத்தில்,பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில், தன் பால்ய பருவத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த அனுபவங்களை சித்தராமையா பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், 'என் தந்தை, என்னை பள்ளிக்கு அனுப்புவது குறித்து பெரிதாக கவலைப்பட்டது இல்லை. அதற்கு பதிலாக நாட்டுப்புற கலைகள் குறித்து கற்றுத் தரும் ஒரு கலைஞரிடம் என்னை சேர்த்து விட்டார்.
'நேரம் கிடைக்கும் போதெல்லாம் மணலில் கன்னட எழுத்துகளை எழுதி பழகினேன். வயல் வெளியில் மாடு மேய்க்கும்போது, கன்னட எழுத்துகளை சத்தம் போட்டு படிப்பேன். எங்கள் ஊர் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர், இதைகவனித்து விட்டார்.
'என் தந்தையிடம் வந்து, அவரை சமாதானப்படுத்தி, என்னை பள்ளிக்கு அனுப்பும்படிவற்புறுத்தினார். பள்ளியில் நேரடியாகவே ஐந்தாம் வகுப்பில் என்னை சேர்த்துக் கொண்டார்...'என்றார், சித்தராமையா.
இதைக் கேட்ட பார்வையாளர்கள், 'சித்தராமையா கூறிய கதையை படமாக எடுத்தால் நன்றாக ஓடும் போலிருக்கிறதே...' என, கிண்டல் அடித்தனர்.