தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ அரண்டவன் கண்ணுக்கு...!

 அரண்டவன் கண்ணுக்கு...!

 அரண்டவன் கண்ணுக்கு...!


PUBLISHED ON : பிப் 22, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 22, 2026 03:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கடைசி வரை துணை முதல்வர் பதவி தான் என, இவரது ஜாதகத்தில் எழுதியிருக்கும் போல...' என, கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சிவகுமார் பற்றி கிண்டல் அடிக்கின்றனர், அவரது அரசியல் எதிரிகள்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமையா முதல்வராக பதவியேற்கும் முன், சிவகுமாரும் அந்த பதவிக்கு போட்டி போட்டார்.

காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, 'ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி. முதலில் சித்தராமையா பதவி வகிக்கலாம்...' என, எழுதப்படாத ஒப்பந்தம் போட்டு, இருவரையும் சமாதானப் படுத்தியது.

ஆனால், இரண்டரை ஆண்டுகள் முடிந்தாலும், முதல்வர் பதவியில் இருந்து இறங்க மறுக்கிறார், சித்தராமையா. இதையடுத்து, முதல்வர் பதவியை கைப்பற்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்ய திட்டமிட்டுள்ளார், சிவகுமார். பதவியை தக்க வைக்க சித்தராமையாவும் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளார்.

சித்தராமையாவின் ஆதரவாளரான கால்நடைத் துறை அமைச்சர் வெங்கடேஷ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 11 பேரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுற்றுலா அனுப்பி வைத்துள்ளார்.

'பதவியை தக்கவைத்துக் கொள்ள தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, சித்தராமையா வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்' என, சிவகுமார் ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.

சித்தராமையா தரப்போ, 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்...' என்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us