sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ 'டிவி' சீரியலும், விளம்பரமும்!

'டிவி' சீரியலும், விளம்பரமும்!

'டிவி' சீரியலும், விளம்பரமும்!


PUBLISHED ON : அக் 14, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தொகுதி மக்களின் குறைகளை கேட்கலாம் என்று தான் போனேன்... ஆனால், இப்படி ஒரு குறையை கூறுவர் என எதிர்பார்க்கவில்லை...' என்று ஆச்சரியப்படுகிறார், தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார் பிரிவு எம்.பி., சுப்ரியா சுலே.

இவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான சரத் பவாரின் மகள். கடந்த, 2009ல் இருந்து, மஹாராஷ்டிராவின் பாரமதி தொகுதி எம்.பி.,யாக உள்ளார்.

சமீபத்தில், தன் தொகுதி மக்களின் குறைகளை கேட்பதற்காக அங்கு சென்றிருந்தார், சுப்ரியா சுலே. பலரும், 'எங்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை; சாலை வசதி இல்லை...' என, குறைகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண், தயங்கி தயங்கி சுப்ரியாவிடம் வந்தார். அவரிடம், 'உங்களுக்கு என்ன பிரச்னை?' என, சுப்ரியா கேட்டார். அந்த பெண், 'என் ஒரே பொழுதுபோக்கு, 'டிவி' சீரியல் பார்ப்பது தான். ஆனால், சீரியல்களுக்கு இடையில் அளவுக்கு அதிகமான விளம்பரங்களை ஒளிபரப்புகின்றனர். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி, விளம்பரங்களை குறைத்தால் நன்றாக இருக்கும்...' என்றார், அப்பாவியாக.

இதைக் கேட்டதும், அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர். சுப்ரியாவோ, அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு, 'அடுத்த முறை தொகுதிக்கு வரும்போது, சீரியல்களுக்கு இடையில் எவ்வளவு விளம்பரங்கள் வருகின்றன என, எண்ணி விட்டுத்தான் வரணும் போலிருக்கிறது...' என முணுமுணுத்தபடியே கிளம்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us