sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ அவகாசம் எங்கே?

 அவகாசம் எங்கே?

 அவகாசம் எங்கே?

1


PUBLISHED ON : மே 15, 2026 12:54 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 15, 2026 12:54 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இன்னும் புதிய முதல்வர் பொறுப்பேற்கவில்லை. அதற்குள் இந்த அதிகாரிகள் ஏன் இவ்வளவு அவசரப்படுகின்றனர்...' என, கோபத்துடன் கேள்வி எழுப்புகின்றனர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர்.

கேரளாவில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்று, முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன். இதற்கு முன், காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி மாறித் தான் ஆட்சி செய்து வந்தன.

மூன்றாவது முறையும் வெற்றி பெற்று சாதனை படைத்துவிட வேண்டும் என்ற பினராயி விஜயனின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டது, சமீபத்தில் நடந்த கேரள சட்டசபை தேர்தல். இதில், காங்கிரஸ் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் சட்டசபை குழு தலைவராக, அந்த கட்சியின் சதீஷன் தேர்வு செய்யப்பட்டார். இன்னும் அவர் முதல்வராக பதவியேற்கவில்லை. ஆனால், அதற்குள் பினராயி விஜயனுக்கு, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்யும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, அவரும் பங்களாவை காலி செய்து, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள குடியிருப்புக்கு சென்று விட்டார். 'தொடர்ச்சியாக, 10 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த பினராயி விஜயனுக்கு, அரசு பங்களாவை காலி செய்ய, இரண்டு மாதமாவது அவகாசம் வழங்கியிருக்கலாமே...' என கொந்தளிக்கின்றனர், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us