தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ யாரைத்தான் நம்புவதோ?

 யாரைத்தான் நம்புவதோ?

 யாரைத்தான் நம்புவதோ?


PUBLISHED ON : பிப் 25, 2026 03:10 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2026 03:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நாமும் ஒரு பெரிய அரசியல் தலைவராகி விடலாம் என நினைத்தால், விட மாட்டார்கள் போலிருக்கிறதே...' என கவலைப்படுகிறார், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா.

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், தன் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமா ராவை, அரசியல் வாரிசாக அறிவித்தார்.

இதனால் கடுப்பான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, தன் சகோதரருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். இதனால், மகளை கட்சியில் இருந்து சந்திரசேகர ராவ் நீக்கி விட்டார்.

சமீபத்தில் தெலுங்கானாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியுடன் இணைந்து, வேட்பாளர்களை நிறுத்தினார், கவிதா.

இந்த தேர்தலில் கவிதா ஆதரவாளர்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், வட்டேபள்ளி நகராட்சியில், மொத்தமுள்ள, 10 வார்டுகளில், எட்டில் வெற்றி பெற்றனர்; அந்த நகராட்சி, கவிதா ஆதரவாளர்கள் வசமானது.

ஆனால், இந்த மகிழ்ச்சி கவிதாவுக்கு ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. அந்த எட்டு கவுன்சிலர்களுமே, ஆளுங்கட்சியான காங்கிரசில் இணைந்து விட்டனர்; இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, 'அரசியலில் யாரையுமே நம்பக்கூடாது...' என புலம்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us