sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/வம்பு இழுப்பது ஏன்?

வம்பு இழுப்பது ஏன்?

வம்பு இழுப்பது ஏன்?


PUBLISHED ON : பிப் 22, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 22, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'விலகி விலகிப் போனாலும் ஓட ஓட விரட்டுகின்றனரே...' என காங்., முன்னாள் தலைவர் ராகுலின் நிலை குறித்து கவலையுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

உத்தர பிரதேசத்தில்ஒரு காலத்தில், காங்கிரஸ் தான் கொடி கட்டி பறந்தது. பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளும் கட்சியாகவும்இருந்தது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பா.ஜ., ஆகிய கட்சிகளின் வளர்ச்சிக்கு பின், காங்கிரசின் செல்வாக்கு சரியத் துவங்கியது.

ஆனாலும், இங்குள்ள ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இந்திரா, ராஜிவ், சஞ்சய்ஆகியோர் இந்த தொகுதிகளில் வெற்றி பெற்றதே இதற்கு காரணம்.

இவர்களுக்கு பின், சோனியாவும், ராகுலும் இந்த தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில் அமேதியில் ராகுலை தோற்கடித்தார், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், நிலைமை இன்னும் மோசம். உடல் நலத்தை காரணம் காட்டி, ரேபரேலியில் போட்டியிடப் போவது இல்லை என ஒதுங்கி விட்டார், சோனியா.

இதனால், உ.பி.,யில் காங்கிரசுக்கு ஒரு சில இடங்களில் இருந்த அடையாளமும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியோ, 'அமேதியில் போட்டியிட்டு என்னை வெல்ல ராகுல் தயாரா...' என சவால் விட்டுள்ளார்.

ராகுலின் விசுவாசிகளோ, 'ஒதுங்கி போனாலும்,விடாமல் வம்பு இழுக்கின்றனரே...' என புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us