sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/கனவு பலிக்குமா?

கனவு பலிக்குமா?

கனவு பலிக்குமா?


PUBLISHED ON : ஜன 13, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இனி, கட்சி தொண்டர்களை தக்க வைப்பது மிகவும் சிரமமான காரியம் தான்...' என பெருமூச்சு விடுகிறார், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து, கூட்டணி ஆட்சி அமைத்து, முதல்வராக அதிகாரத்தை அனுபவித்து வந்தார், உத்தவ் தாக்கரே.

இவரது கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்களை வளைத்து, பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமாகி விட்டார்; இதற்காக, அவருக்கு முதல்வர் பதவியை பரிசளித்தது, பா.ஜ., மேலிடம்.

ஆட்சி அதிகாரம் இருப்பதால், சிவசேனாவில் உள்ள எஞ்சியநிர்வாகிகளையும், தன் பக்கம் இழுத்து வருகிறார், ஷிண்டே.

'உண்மையான சிவசேனா யார்' என முடிவு செய்யும் அதிகாரம், மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகரிடம் இருந்தது. சமீபத்தில் இதில் உத்தரவு பிறப்பித்த சபாநாயகர், 'ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான், உண்மையான சிவசேனா' என, அறிவித்தார்.

இதனால், தன்னுடன் இருக்கும் மீதமுள்ள நிர்வாகிகளும், ஷிண்டே பக்கம் ஓடி விடுவரோ என கவலையில் ஆழ்ந்துள்ளார், உத்தவ் தாக்கரே.

'சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து, நீதிமன்றத்துக்கு செல்வோம். விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் நம் பலத்தை நிரூபிப்போம். பொறுமையாக இருங்கள்...' என, கட்சி நிர்வாகிகளுக்கு தைரியம் அளித்து வருகிறார், உத்தவ் தாக்கரே.

ஷிண்டே தரப்பினரோ, 'உத்தவ் தாக்கரேயின் கனவு பலிக்காது...' என, கிண்டலடிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us