PUBLISHED ON : நவ 19, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலுான் மிதப்பது எப்படி
பலுானில் உள்ள காற்றை வெப்பப்படுத்தும்போது அது விரிவடைகின்றது. இதன் காரணமாக பலுானில் உள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது. அதனால் பலுானில் உள்ள காற்றின் அடர்த்தி, வெளிப்புறத்தில் உள்ள காற்றின் அடர்த்தியைவிட குறைகிறது. இந்த அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக வெப்பக்காற்று அடைக்கப்பட்ட பலுான், காற்றில் மிதக்கின்றது. நெருப்பு என்பது காற்று சேர்ந்த வெப்பமான புகைதான். ஆகவே அடர்த்தி குறைவான நெருப்புப் பிழம்பும், அதிலிருந்து வரும் புகையும் புவி ஈர்ப்பு விசையை மீறி மேல்நோக்கி எரிகின்றன.

