PUBLISHED ON : டிச 03, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தரையில் பறக்கும் ரயில்
அதிவேக ரயில்களுக்கு பெயர் பெற்றது சீனா. தற்போது பயணிகள் விமானத்தை விட (மணிக்கு 850 - 920 கி.மீ.,) வேகமாக செல்லும் ரயிலை சீனா உருவாக்கியுள்ளது. இது மணிக்கு 1000 கி.மீ., வேகத்தில் செல்லும். மேலும் இந்த ரயிலில் '5ஜி' இணையதள வசதியும் கிடைக்கும். தற்போது சீனாவில் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில்
செல்லும் ரயிலில் தான் '5ஜி' வசதி கிடைக்கிறது. இந்த ரயில் 'மேக்லெவ்' தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. 2 ஜோடி காந்தங்களில் ஒன்று ரயில் பெட்டியை
தண்டவாளத்திற்கு மேல் உயர்த்தும், மற்றொன்று ரயிலை மின்காந்த விசையால் முன்னோக்கி இயக்கும்.