PUBLISHED ON : ஜன 28, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடத்தின் அமைவிடம் கணக்கீடு
பூமியில் ஒரு இடத்தின் உயரம், சராசரி கடல்நீர் மட்டத்தை அடிப்படையாக வைத்து குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக எவரெஸ்ட் சிகரம், சராசரி கடல்நீர் மட்டத்தில் இருந்து 29,029 அடி உயரத்தில் உள்ளது. குளம், ஏரி, கண்மாய்களில் நீர் மட்டம் சலனமற்று இருக்கலாம். ஆனால் கடலில் எப்போதும் அலைகள் உண்டு. சில சமயம் பெரிய அலைகளும் இருக்கும். எல்லா நேரமும், எல்லா இடத்திலும் கடல்நீர்மட்டம் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதற்கு காரணம் பூமி மீது நிலவு செலுத்தும் ஈர்ப்பு சக்தி, காற்று. இதனால் தான் சராசரி கடல்நீர் மட்டம் என குறிப்பிடப்படுகிறது.

