PUBLISHED ON : ஏப் 02, 2024 12:00 AM
செவ்வாயில் தண்ணீர்
ஐரோப்பிய
விண்வெளி மையம் செவ்வாய் கோளுக்கு அனுப்பிய 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்'
ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தை 25 ஆயிரம் முறை சுற்றியிருக்கிறது. இந்த
ஆர்பிட்டர் 2003 ஜூன் 2ல் சோயுஜ் ராக்கெட்டில் அனுப்பப்பட்டது. 2003 டிச.
25ல் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இதிலிருந்த பீஜில் லேண்டர்
செவ்வாயில் தரையிறங்கியது. செவ்வாயின் வளிமண்டலம், தரைப்பகுதி, நிலவுகள்
பற்றி ஆய்வில் ஈடுபட்டது. 2004ல் செவ்வாயின் தென் துருவத்தில் தண்ணீர்
உறைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.
தகவல் சுரங்கம்
உலக ஆட்டிசம் தினம்
ஆட்டிசம்
என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக்
குறைபாடு. குழந்தையின் 10 - 18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும்.
இப்பாதிப்பு உள்ளவர் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், சமூகத்தில்
கலந்து பழகும் திறன் போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். ஒரே மாதிரி
விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வர். இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன
செய்ய வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஏப்., 2ல் உலக ஆட்டிச
விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

