PUBLISHED ON : மே 28, 2024 12:00 AM

மலையில் பனி உருவாவது ஏன்
இமயமலை உள்ளிட்ட சில மலைப்பகுதிகளில்
பனி சூழப்பட்டிருக்கும். அனைத்து மலைகளிலும்
பனி சூழ்வதில்லை. அதன் உயரம், அமைவிடத்தை பொறுத்தே இது உருவாகிறது. பொதுவாக பூமியின் தரையில் இருந்து மேலே செல்ல வெப்பம் குறையும். மேலும் மலை அடிவாரப்பகுதியை போல, மலை உச்சியால் வெப்பத்தை இழுத்து வைக்க இயலாது. இதனால் வெப்பம் குறையும். மலை உச்சியில் ஆவியாதல் குறைவு என்பதால் ஈரப்பதம் அதிகம். இதனால் நிரந்தரமான குளிர்ச்சியான சூழல் மலை உச்சியில் நிலவுவதால் பனி உறைந்து விடுகிறது.
தகவல் சுரங்கம்
காகித பணம் - வரலாறு
உலகில் முதன்முதலாக பணத்தை காகிதத்தில் அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா. கி.பி., 618 முதல் 907 வரை சீனாவை ஆட்சி செய்த சாங் மன்னர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்பின் பல ஆண்டுகள் கழித்து மற்ற நாடுகள் காகிதத்தில் அச்சிடத் தொடங்கின. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் சார்லஸ்
கன்னிங் வைரஸ்ராயாக இருந்தபோது 1861ல் காகித ரூபாய் நோட்டு அறிமுகபடுத்தப்பட்டது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வித ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துகின்றன. அது போல அதன் மதிப்பும் நாட்டுக்கு நாடு மாறுபடும்.