PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெடிக்க தயாராகும் எரிமலை
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 'எட்ஜ்கம்ப்' மலையில் 800 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை, இனி எந்த நேரத்திலும் வெடிக்கலாம். இதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் உயரம் 3201 அடி. பூமியின் உட்புறத்திலுள்ள வெப்பமான கற்குழம்பு வெடித்து வெளியேறும் பகுதி எரிமலை. வெப்பமான பாறைகள் மேல்நோக்கி வருவதாலும் எரிமலை உருவாகிறது. உமிழப்படும் எரிமலைக் குழம்பு 'மாக்மா' எனப்படுகிறது. பொதுவாக எரிமலை கூம்பு வடிவத்தில் இருக்கும். அதன் உச்சி எரிமலை குழம்பை வெளியிடும்.