PUBLISHED ON : நவ 26, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணக்கார விண்கல்
'16 பிசிசி' விண்கல்லை ஆய்வு செய்ய நாசா 2023அக். 13ல் விண்கலத்தை அனுப்பியது. 2029ல் சென்றடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை 1852 மார்ச் 17ல் இத்தாலிய விஞ்ஞானி அன்னிபலே காஸ்பரிஸ் கண்டுபிடித்தார். இது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட 16வது விண்கல். இதனால் தான் அதற்கு அப்பெயர். அகலம் 278 கி.மீ. பரப்பளவு 1.65 லட்சம் சதுர கி.மீ. இதை பூமிக்கு கொண்டு வந்தால், அனைவரும் பணக்காரராக மாறலாம். ஏனெனில் இதில் 60 சதவீதம் தங்கம், இரும்பு, நிக்கல் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க உலோகங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

