PUBLISHED ON : டிச 06, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விண்வெளியில் நெரிசல்
உலகின் பல நாடுகளும் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்புகிறது. இவை விண்வெளியில் குறைந்த புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. தற்போது 14 ஆயிரம் செயற்கைக்கோள்கள் சுற்றுகின்றன. இதில் 3500 பயன்பாட்டில் இல்லாதவை. ஆண்டுதோறும் அதிகரிக்கும் செயற்கைக்கோள்களால் விண்வெளியில் நெரிசல், ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது என ஐ.நா., எச்சரித்துள்ளது. இதற்கு தீர்வாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நாடுகள், விண்வெளி அமைப்புகளை ஐ.நா., வலியுறுத்தியுள்ளது.